Wednesday, May 8, 2019

கோடீஸ்வரர் பக்கீராக!

Image may contain: one or more people, people standing and beard
ஒரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின், அங்கு ஹரம் ஷரீபை
சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிகருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.
.
"எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள்..." என்று கூறினார்.
.
அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணிபர்ஸை வெளியே எடுத்தார். அந்த சவ்தி மனிதரிடம் கூறினார், "நான் ஸதக்கா ஏதும் தேவையற்றவன். இதோ எனது மணிபர்ஸை பாருங்கள்."
.
அது பல வங்கிகளின் கார்ட்டுகாளால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.
.
அந்த சவ்தி மனிதர் அதிர்ச்சியால் அதிர்ந்துவிட்டார். "நீங்கள் யார்? இங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்.?"
.
"மாஷா அல்லாஹ், எனக்கு காஷ்மீரிலும் இந்தியா எங்கனும் பல தொடர் ஹோட்டல்கள் இருக்கின்றன. அடிக்கடி மஸ்ஜிதுல் ஹரமை சுத்தம் செய்வதற்கு தொழில் வேலை வாய்ப்பு வீஸாவுக்கு விண்ணப்பித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் இந்த புனித மஸ்ஜிதின் பணியாளனாக இரவு பகலாக சேவையாற்ற விரும்புகிறேன்.
.
அவன் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், என் நற் செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவனது திருமுக தரிசனத்தை எனக்குத் தந்தருள வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்." என்று அந்த காஷ்மீரி கூறினார்.... ஸுப்ஹானல்லாஹ்!

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval