Saturday, January 16, 2021

மௌலானா அர்ஷத் மதனி

முதல்வர்,தாருல் உலூம் தேவ்பந்த்,

தலைவர்,ஜம்மியத் உலமா.    
=====================

" முன்னெப்போதும் இல்லாத வகையில் சித்தாந்த ரீதியான போர் இப்போது நாட்டின் எல்லா இடங்களிலும்  நடைபெறத் துவங்கியிருக்கிறது.

இந்தப்போரை எந்த ஆயுதங்கள் மற்றும் தொழிநுட்பங்களாலும் எதிர்கொண்டு விட இயலாது.

வளரும் தலைமுறைக்கு இஸ்லாமிய அறிவுப் பின்புலத்துடன் கூடிய நவீன உயர்கல்வி அளிப்பதின் மூலமே இந்த சிந்தாந்தப் போரை வெற்றி கொண்டு நமது இலக்கை எட்ட முடியும். 

குடியரசு இந்தியாவில் அமைந்த எல்லா அரசுகளும் திட்டமிட்டு முஸ்லிம்களை கல்வி கற்பதிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டன.

முஸ்லிம்கள் கல்வி கற்றால் அவர்களது முயற்சியையும் திறனையும் வைத்து மிக உயர்ந்த இடத்திற்கு வந்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதனால் தந்திரங்களைக் கொண்டும் தடைகளை ஏற்படுத்தியும் பொது நீரோட்டத்திலிருந்து  முஸ்லிம்களை விலக்கி வைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

என்ன விலை கொடுத்தேனும் முஸ்லிம்கள் உயர்கல்வி கற்க வேண்டும்.

மார்க்க கல்வியுடன் நவீன கல்வியை பாரபட்சமின்றி வழங்கும் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் தான் முஸ்லிம்களின் இப்போதைய தேவை.

செல்வ வளமுள்ள வடஇந்திய முஸ்லிம்கள், முஸ்லிம் பொதுச்சமூகத்தின் இந்த கல்வித் தேவைகள் குறித்து கவனம் இல்லாமல் இருக்கின்றனர். 

வேறு வேறு விடயங்களில் கவனம் செலுத்துவதை குறைத்து முஸ்லிம்கள் உயர்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும்.

நாட்டின் இன்றைய நெருக்கடியான நிலையை நமது அறிவாயுதத்தைக் கொண்டு மட்டுமே வெல்ல முடியும் "

தொகுப்பு : CMN SALEEM

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval