Monday, December 30, 2013

அல்லாஹுவின் சட்டம் அமல் மரணத்தை எதிர் நோக்கும் சவூதி இளவரசர்


                                      
 
அல்லாஹுவின் சட்டம் அமல் மரணத்தை எதிர் நோக்கும் சவூதி இளவரசர் ..!!! குற்றவாளி முஸ்லிம் என்றால் இஸ்லாமிய சட்டம் சும்மா விட்டு விடுமா ? சவூதி இளவரசர் - ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற இவரை - கொலை செய்ய வேண்டும் என்று பாதிக்கபட்ட இறந்தவரின் தந்தை கூறியுள்ளதாக சவூதியில் உள்ள செய்தி நிறுவனங்கள் தெரிவித்தாக கூறபடுகிறது. சவூதிஅரேபியாவின் பிரிமீயர் இணை பாதுக்காப்பு அமைச்சர் சல்மான் அவர்கள் "இளவரசருக்கு" எந்த ஒரு சிறப்பு சலுகையும் கொடுக்க முடியாது அவர் ராயல் குடம்பத்தை சேர்ந்தவராக இருப்பினம் என்று கூறியுள்ளார். அல்லாஹுவின் இறைச்சட்டம் (ஷரியாஹ்) குற்றவாளிகள் மீது பாயும் எந்த ஒரு விதிவிலக்கும் இன்றி என்றும் என்றும் சவூதியின் உள்த்துறை அமைச்சர் பிரின்ஸ் முகம்மத் பின் நைப் தெரிவுத்துள்ளதாக அராப் நியூஸ் கூறியுள்ளது. அல்லாஹுவின் இறைசட்டத்திர்க்கு (ஷரியாஹ்) முன் பெரியவர் சிறியவர், ஏழை , பணக்கரான் எந்த எந்த வேறுபாடும் கிடையாது என்றும் மேலும் சக்திபடைத்தவ்ர்கள் இறைவன் சட்டத்தின் முன் பலவீனமானவர்கள் என்பது நிரூபிப்பது எதுவரை என்றால், பலவீனமானவர்கள் தங்கள் உரிமைகளை இந்த சக்தி படைத்தவர்களிடம் இருந்து பெரும் வரை என்றும், மேலும் பலவீனமானவர்கள் சக்திபடைத்தவர்கள் என்பது அவர்கள் உரிமை பாத்துக்கபடும் வரை தான் என்று அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. யாரும் அச்சட்டத்தின் நீதிக்கு இடையூறு விளைவிக்க முடியாது என்றும், இதுதான் சவூதியை அரேபியாவின் பாரம்பரியம் என்றும், அதற்க்காதான் (நீதிக்கு ஒத்துழைக்க ) நாம் இருக்கிறோம் என்றும் அச்செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஒரு சவூதி குடிமகன் மற்றும் மன்னர் அப்துல்லாஹ் அவர்கள், அரச குடும்பத்திற்கும் - பாதிக்கபட்ட குடும்பத்திற்கும் சமாதன பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால், மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட (இறந்த) நபரின் தந்தை - கொலை செய்த (இளவரசருக்கு) எந்த ஒரு மன்னிப்பும் வழங்க முடியாது என்றும், சமரச குழுவை சந்திப்பது அழகில்லை என்று கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவரின் தந்தை - ப்லட் மணி BLOOD MONEY (கொலை செய்யப்பட்டவ்ர்க்கு கொடுக்கும் இழப்பீட்டு ஈட்டு தொகை) தனக்கு திருப்தி அளிக்காது என்று கூறியுள்ளார் கொலைக்கு கொலை என்ற மரண தண்டை (தலை வெட்டப்பட்டு நிறவேற்றபடுவது ) -முறையாக அரசு விசாரித்து தண்டனை கொடுப்பது இஸ்லாமிய சமூகத்தில் பொதுவானது என்றும் செய்தி குறிப்பில் உள்ளது. இந்த வருடம் 72 குற்றவாளிகளுக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறவேற்றபட்டுளது குறிப்பிடத்தக்கது A Saudi prince convicted of murder faces execution after the victim’s father refused to pardon him, local media have reported. Crown Prince Salman, Deputy Premier and Minister of Defence, reportedly said the prince would not be given special treatment despite his royal position. “Shariah [law] shall be applied to all without exception,” he wrote in a message to Interior Minister Prince Muhammad bin Naif, Arab News reported. “There is no difference between big and small, rich and poor. The powerful are weak before God’s law until others get their rights from them while the weak are powerful until their rights are protected. Nobody is allowed to interfere with the judiciary’s decision. This is the tradition of this state. We are committed to following the Shariah.” The victim was a Saudi citizen and King Abdullah reportedly issued a royal decree stating that capital punishment would be enforced if the reconciliation process between the prince and the victim’s family failed. The victim’s father issued a statement saying he was not ready to pardon the prince and claimed the reconciliation committee was not fair to him. He also was not satisfied with the amount of blood money – offered by killers as a means to avoid the death penalty - offered. Executions are common in the strict Muslim society, with beheading the most common method. There have been 72 official executions in the kingdom so far this year, according to AFP.
courtesy facebook

Sunday, December 29, 2013

அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு

மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு விதிக்கப் பட்ட நாள் வருவதற்கு முன்பு அவன் வேதத்தில் அவன் உங்களுக்காக உபதேசித்துள்ள அந்த உபதேசத்தின்படி வாழ பழகிக் கொள்ளுங்கள் இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டவாளிகளே!! 
அத்தியாயம் 1
அல் ஃபாத்திஹா

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய
அல்லாஹ்வின் பெயரால்.

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; அகிலங்களின் இறைவன்.

2. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

3. அரசன் நாள் வழி. { இஸ்லாம் }

4. நிச்சயமாக உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; 

உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேரான பாதையில் வழி நடத்துவாயாக.

6. நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி; 

உன் கோபத்திற்கு ஆளானோர் வழியும் அல்ல;

வழி தவறியோர் வழியும் அல்ல.

அத்தியாயம் 2
ஸூரத்துல் பகரா 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்.

1. அலிஃப் – லாம் – மீம்.

2. இது இறைவனின் வேதம் ; இதில் சந்தேகமே இல்லை; பயபக்தியுடையோருக்கு வழிகாட்டி.

3. அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; சலாத்தையும் நிலை நிருத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.

4. அவர்கள் உமக்கு அருளப்பட்டதின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

5. இத்தகையோர்தான் தங்கள் இறைவனின் வழியில் இருக்கின்றார்கள்; இவர்கள்தாம் நிச்சயமாக வெற்றிபெற்றவர்கள்.

6. நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் சமமே; அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்; 

7. இத்தகையோர் இருதயங்களின் மீதும், செவிப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான்; மேலும், இவர்களுடைய பார்வையில் ஓர் திரை கிடக்கின்றது; மேலும், இவர்களுக்கு கடினமான வேதனையும் உண்டு.

8. இன்னும், மனிதர்களில் “ நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

9. அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களேத் தவிர வேறில்லை; எனினும், அவர்கள் உணர்ந்துக் கொள்ளவில்லை.

10. அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது அல்லாஹ் நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்கு துண்பம் தரும் வேதனையும் உண்டு.
courtesy MZ KHAN B.A.B.L

Friday, December 27, 2013

”இஸ்லாத்தின் உணமையான ஐந்து கடமைகள்”

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிற்றஹீம்

அல்லாஹ்,ரஸூல்,குர்ஆன்-ம் சொல்லும் நம் அனைவரின் செயல்களும்.

”இஸ்லாத்தின் உணமையான ஐந்து கடமைகள்”

இஸ்லாமிய மக்களே:

ஓர் உண்மையான விஷயத்தை நீங்கள் முதன்முறையாக பார்க்கவும்,படிக்கவும் போகின்றீர்கள்
கடந்த 1434 ஆண்டுகளாக கேட்ப்பாராக கிடந்த உண்மையையும் பரிகாசமாகவும்,ஏளனமாகவும் நாம்
ஆக்கிகொண்ட ஓர் உண்மையை உங்களுக்கு
காட்டுவதற்கு முன்பு உங்களிடம் ஓர் கேள்வியை
கேட்டு அந்த மாபெரும் உண்மையை சொல்கிறேன்.

மேலும் அந்த உண்மை உங்கள் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கின்றது நீங்கள்தான் அதை ஏறெடுத்து பார்க்காமலும்,தொடாமலும் தூசியால் மறைக்கப்பட்டு
விட்டது.அதன்மீது சிறிது கூட ஆசையும் இல்லாமல்
போய்விட்டது.

கேள்வி: குர்ஆன் வசனங்களின்படி நாம் நடப்போமானால் சுவர்க்கம் செல்வோமா?
அல்லது குர்ஆனுடைய வசனங்களுக்கு மாறாக
நடப்பவர்கள் சுவர்க்கம் செல்வார்களா?

கேள்வி: ஒருவர் குர்ஆனை முறைபடி ஓதி, அதில்
கூறியபடி செயல்பட்டு நடந்தால் அவரை இஸ்லாமியனாக இருக்கின்றார் என்று கூறுவீர்களா?
அல்லது மற்றவர் செய்யும் செயலைப் பார்த்து
{உதாரணமாக தொழுகை,நோண்பு,ஹஜ்} அதன்படி
நடப்பவர்களை நீங்கள் அவர் இஸ்லாத்தில் இருக்கின்றார் என்று சொல்வீர்களா?

இவ்விரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல
வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நீங்கள் இப்பொழுது படிக்கப் போகும் அழிக்க முடியாத உண்மைகளை உங்கள் கண்களால் படிக்கும்போது நீங்கள் நிச்சயமாக உணர்ந்து கொள்வீர்கள் “நீங்கள் யார்? ” என்பதை அதாவது நாம்
“இஸ்லாத்தில் ” இருக்கின்றோமா? அல்லது
அல்லாஹ்வுக்கும்,குர்ஆனுக்கும்,ரஸூலுக்கும்
முதல்தரமான விரோதியாகவும்,ஷைத்தானுக்கு
நண்பனாகவும் இருக்கின்றோமா? என்பதை.

மேலும் ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகமில்லாமலும்,தெளிவாகவும் அறிந்து கொள்வீர்கள் இதுதான் உண்மை...

இப்பொழுது நான் உங்களுக்கு சொல்லும் ஒவ்வொன்றும் குர்ஆனிலிருந்தே சொல்லப்படுன்கிறது அதுமட்டும் அல்ல ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரமாக குர்ஆனிலிருந்தே சூராவையும்,ஆயத்துக்களையும் பார்க்கப்போகின்றீர்கள்.
மேலும் உண்மை எது? என்பதையும் உண்மைக்கு விரோதமானது எந்த செயல்கள்? என்பதையும் வெகு சீக்கிரத்தில் கண்டுகொள்வீர்கள். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றியும்,அவனுடைய வேதனையைப் பற்றியும் பயந்து கொள்வீர்கள்.

உங்களுக்கு குர்ஆனைப் பற்றிய உண்மையை சொல்லிவிடுகிறேன் பின்னர் அல்லாஹ் குர்ஆனைப் பற்றி புகழ்வதையும்,ரஸூல் குர்ஆனைப் பற்றி கூறுவதையும் சொல்லுகின்றேன்.

“குர்ஆனைப் பற்றிய முதல் உண்மை”

இந்த குர்ஆனுக்கு நாண்கு {4} பெரிய சாட்சிகள் உள்ளன

1. ”அல்லாஹ்” தன் வசனங்களை
2. “ஜிப்ரில்” :- க்கு கொடுத்து
3. “ நபி முஹம்மது” அவர் நபிக்குச் சொல்லி
4. “குர்ஆன்” வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டதையெல்லாம் புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த 114 சூராக்களில் {அத்தியாயம்} உள்ள அனைத்து ஆயத்துக்களுக்கும்.மேலும் ஒவ்வொரு வசனமும் இந்த நாண்கு {4} பெரிய சாட்சிகளைக் கொண்டது ஆகும்
“மிக முக்கியமான உண்மை”
ஒரு உண்மையான முஃமின் அல்லது அல்லாஹ்வின் மீதும்,ரஸூல் மீதும்,பேரொளியான இந்த குர்ஆன் மீதும் நம்பிக்கை கொண்டவர், தான் சுவர்க்கம் செல்ல இந்த குர்ஆனிலிருந்து கட்டாயமாகச் செய்யவேண்டிய காரியங்கள் மொத்தம் 2567 விஷயங்கள் ஆகும்.
இந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விஷயங்கள் 1.அல்லாஹ் நமக்கு இட்ட கட்டளைகள்
2.கடமைகள்
3. உபதேசங்கள்
4.நல்ல அமல்கள்
5. தரும காரியங்கள்
6. இரவிலும்,பகலிலும் {24மணி நேரமும் }செய்யவேண்டிய கட்டாய தியாகச் செயல்கள்
ஆகியவற்றைக் கொண்டது ஆகும்.

”அர்த்தங்கள்:- மனிதர்களில் விதம் எட்டு {8}”

இன்னும் நாம் அடிக்கடி உபயோகப் படுத்தும் சில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரியாமலேயே பேசுகிறோம் சிலவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்

1.முஃமின்:- ஈமான் அல்லது நம்பிக்கை கொண்டவர்
இது பெயரளவில் ஈமான் கொள்வது இத்தகையோர்: மற்றவர்களின் பேச்சைக் கேட்டும்,அவர்களின் செயல்களைப் பார்த்தும் அரைகுறையாக நடப்பவர்கள்.

2. முஃமின்:- நம்பிக்கை கொண்டவர்: இவர் குர்ஆனை அரபி மொழியில் மட்டும் ஓதி மூடிவிடுவார்கள் ”குர்ஆன் தர்ஜுமா” வை படிக்க மாட்டார்கள்.{அப்படியும் அர்த்தத்தோடு ஓதினாலும் எதுவும் புரியாது}

காரணம்: குர்ஆனை ஓதுவதற்கு ஆறு முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆறு வழிகளும் குர்ஆனிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

{ஆறு விபரங்களும் என்னவெண்று கேட்காதீர்கள் இவை யாவும் இங்கு{சென்னையில்} நடைபெற்று வரும் ”குர்ஆன் வகுப்பில்” கற்றுத்தரப் படுகிறது.இது ஓர் பெரிய பாடம் ஆகும் நான் இப்போது இதை எழுதினால் எழுதி முடிவு பெறாது.மேலும் இவற்றையெல்லம் சொல்லமுடியுமே தவிர எழுத முடியாது.ஏனென்றால் நான் உங்களுக்குச சொல்லபோகும் விஷயம் வேறு ஆதலால் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்}

3. முத்தகீன்:- இதன் அர்த்தம் ”தக்வா” உடையவர்கள் அல்லது ”பயபக்தியாளர்கள்”

ஒருவர் பயபக்தியுடையவர்கள் ஆவதற்கு குறைந்த பட்சம் அதாவது குர்ஆனை ஓத ஆரம்பித்த தினத்திலிருந்து 15 வருடங்கள் வரை ஆகும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள குர்ஆனை குறைந்தபட்சம் ஐந்து{5} முறையாவது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அதிக கவணத்துடனும்,முக்கியமான விபரங்களை நோட்டுபுத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டும் ஓதி வர வேண்டும்.
“குர்ஆன் வகுப்பில் நடத்தப்படும் பாடம்{SUBJECT} இதுதான்”{தொடரும்}
courtesy MZ KHAN B.A.B.L பாகம் ஒன்று {PART ONE}

Thursday, December 26, 2013

கலிபோர்னியாவில் ஒன்றுகூடிய அதிரையர்கள்

இன்று கிருஸ்த்மஸ் தினமான டிசம் 25ல் அதிரையர்களும்  (BAY) பே ஏரியா தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்ந்து நலம் விசாரித்துகொண்டனர்  இந்நிகழ்ச்சியில் மதிய உணவு  ஏற்பாடுகளை சகோதரர் மீயன்னா சலீம் அவர்களும் சகோதரர் கபூர் அவர்களும், தமிழ் சங்கத்தை சேர்ந்த சகோதரர் கம்பம் அப்துல்லாஹ் அவர்களும் சகோதரர் தஞ்சை  வல்லம் ஜுபைர் அவர்களும்   சகோதரர் கம்பம் அசீம் அவர்களும் மற்றும் பே ஏரியா தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர் .குழந்தைகள் அனைவரும் குதுகலமாக விளையாடி மகிழ்ந்தனர்.   


                                         

.

Monday, December 23, 2013

மரண அறிவிப்பு

மேட்டுத்தெருவைச் சார்ந்த மர்ஹும் MSM  சம்சுதீன் அவர்களின் மகனும் இப்ராஹீம்,டாக்டர் சாகுல் ஹமீது,நூருல் ஹக்அப்துல் ரவூஃப்அப்துல் மாலிக் ஆகியோரின்தகப்பானாரும் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் செயலாளருமாகிய ஹாஜி. அபுல்ஹசன் நேற்று (23-12-2013) வஃபாதானார்கள்.

இன்னாலில்லாஹி  இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின் 

Tuesday, December 17, 2013

கடைபிடியுங்கள்

உடல் நலம் வேண்டுமா? நோன்பு வையுங்கள்
முக அழகு வேண்டுமா? தஹஜ்ஜத்து தொழுங்கள்
உயர்ந்த வாழ்வு வேண்டுமா? குரானை அழகுபட
ஓதுங்கள்
நற்பாக்கியம் வேண்டுமா? நேரம் தவறாது தொழுங்கள்
மகிழ்ச்சி வேண்டுமா?பாவமன்னிப்பு தேடுங்கள்
கவலை நீங்க வேண்டுமா?அதிகம் பிரார்த்தணை செய்யுங்கள்?
நேருக்கடி நீங்க வேண்டுமா?லாஹவ்ல வலா குவவத இல்லா பில்லா அதிகம் ஓதுங்கள்
வாழ்வில் அபிவிருத்தி வேண்டுமா?சலவாத் அதிகம் ஓதுங்கள்
கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமா?இதை
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்



Monday, December 16, 2013

குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.

இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.

கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...

சத்தான உணவு :

குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவாக சாப்பிடவும்  :

குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி :

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும்.

சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி :

சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.

மாய்ஸ்சுரைசர் :

குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.

குளிர்கால உடை :

குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நோய்கள் :

குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.

தியானம் :

மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

சூடான பானங்கள் :

சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு!

காரம் கொஞ்சம் தேவை :

உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் :

குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

வைட்டமின் `டி' :

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.

தண்ணீர் : சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே!

சன் ஸ்க்ரீன் :

குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.

ஆற்றலுக்கு முன்னுரிமை :

உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
courtesy;Malaimalar

Monday, December 9, 2013

சென்னை விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான அதிரை வாலிபர் பிடிபட்டார்

ஆலந்தூர், டிச.10- 
சென்னை விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான வாலிபர் பிடிபட்டார்

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி (வயது 33) என்பவர் வந்தார். அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அப்போது கடந்த 2004-ம் ஆண்டு நிகழ்ந்த அடிதடி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதை குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனே அவரை பிடித்து விமான நிலைய தனியறையில் வைத்தனர். 

இதுகுறித்து தஞ்சை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து பார்த்தசாரதியை அழைத்துச் செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
courtesy .Malailalar


குடைமிளகாய் மருத்துவ பலன்கள்


கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது. 
குடைமிளகாய் மருத்துவ பலன்கள்
சைனீஸ் உணவுகளில் ருசிக்கும், அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் இந்த காய்கறி வகைக்கு இப்போது இந்தியாவிலும் வரவேற்பு மிக அதிகம். இப்போது இந்திய பாரம்பரிய உணவுகளிலும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிறங்களில் கலந்து காணப்படுகிறது. பொதுவாகவே உணவு என்றாலே உப்பு, காரம், புளிப்பு போன்ற சுவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

காரத்திற்காக பச்சை மிளகாய் சேர்க்கப்படுவதுண்டு. அந்த அளவுக்கு காரமற்றது குடைமிளகாய் என்றாலும், கலர் கலராய் உணவுகளுக்கு அழகூட்டுவது குடைமிளகாயின் சிறப்புத் தன்மை. குடை மிளகாயின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இப்போது இந்தியாவில் அமோகமாக விளைச்சல் செய்யப்படுகிறது. 

இதற்கு ஒரு பொதுப் பெயர் இல்லை. நாட்டிற்கு நாடு இதன் பெயர் மாறுபடுகிறது. இங்கிலாந்தில் ‘சில்லி பெப்பர்’ என்றும், அமெரிக்கா மற்றும் கனடாவில் ‘பெல் பெப்பர்’ என்றும், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் ‘காப்சிகம்’ என்றும் அழைக்கிறார்கள். சுவீட் பெப்பர் என்றும் அழைப்பதுண்டு. 

இதில் இருக்கும் காரத்தன்மைக்கு காரணம், ‘காப்ஸேயில்’ என்ற ரசாயனம். காரத்தன்மையின் பத்து சதவீதம் குடை மிளகாயின் விதையிலும், தோலின் வெளிப்பகுதியிலும் அடங்கியிருக்கிறது. மீதமுள்ள 90 சதவீத காரத்தன்மை உள்தோல், மத்திய பகுதி, விதையை உற்பத்தி செய்யும் திசுக்கள் அடங்கியுள்ள பகுதிகளில் உள்ளது. 

குடை மிளகாயை உணவில் சேர்ப்பது பல விதங்களில் நமக்கு பலன் அளிக்கிறது. வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக அது செயல்படுகிறது. கீமோதெரபி, ரேடியோ தெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது வாய்ப்புண் தோன்றும். 

அவைகளை குடைமிளகாய் கட்டுப்படுத்தும். பல்வலி, மலேரியா, மஞ்சள்காமாலை போன்றவை களை கட்டுப்படுத்தும் சக்தியும் ‘காப்ஸேயில்’ இருக்கிறது. காப்ஸேயில் ப்ராஸ்டேட் புற்று நோயை உருவாக்கும் திசுக்களின் செயல்பாட்டை மந்தமாக்கும் சக்தி கொண்டது என்பது ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் நீர்க்கட்டை குறைக்கும் தன்மையும் கொண்டது. குடைமிளகாயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைய உள்ளது. 

இவை இரண்டும் சக்திமிக்க ஆன்டி ஆக்சிடென்ட்களாக செயல்பட்டு, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. குடைமிளகாய் மஞ்சள், சிவப்பு, பச்சை போன்ற நிறங்களில் அதிகமாக கிடைக்கிறது. பச்சையாகவோ, பாதி வெந்நிலையிலோ இதை சாப்பிட்டால்தான் கூடுதல் சத்து உடலுக்கு கிடைக்கும். 

100 கிராம் குடை மிளகாயில் இருக்கும் சத்து: 

புரோட்டின் - 0.99 கிராம். 
சக்தி - 31 கலோரி. 
சோடியம் - 4 மி.கிராம். 
கொலஸ்ட்ரால் - இல்லை. 
கொழுப்பு - 0.3 மி.கிராம். 
தாதுச் சத்து - 6.02 மி.கிராம். 
பொட்டாசியம் - 211 மி.கிராம். 
மெக்னீசியம் - 12 மி.கிராம். 
வைட்டமின் ஏ - 3131 ஐ.யூ. 
வைட்டமின் சி - 127.7 மி.கிராம். 
கால்சியம் - 7 மி.கிராம். 
இரும்பு - 0.43 மி.கிராம். 
courtesy malaimalar

Friday, December 6, 2013

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

மேலத்தெரு அண்ணாவியார் லேனைச்   சேர்ந்த மர்ஹூம் மு.மு சேக்நசுருதீன் அவர்கள் மகளும்  
s,முஹைதீன் (தங்கவாப்பு  செலக்சன் செண்டர் )s ,ஜெகபர் அலி .s நிஜார் இவர்களின் சகோதரியும் 
த,ப,பகுருதீன் இவர்களின் மனைவியுமான சம்சுனிஷா      அவர்கள்      காலமாகிவிட்டார்கள்  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா நாளை 7/12.13/ காலை 10.30
மணியளவில் பெரிய ஜூம்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் 


இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின் 

பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம்

  இன்று  டிசம்பர் -6   பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது அப்பொழுது  அதிரை மதுக்கூர் மற்றும் சுற்று வட்டாரத்திளுள்ள ஏராளமான தமுமுகவினர் தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்



,கடந்த 1992ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்து இன்றுடன் இருபது ஆண்டுகள் ஆகியும் அபொழுது ஆண்ட காங்கிரஸ்  அரசு அதனை மீண்டும் அதே இடத்தில் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தும் இன்றுவரை அதை செயல்படுத்தவில்லை இதைக்கண்டித்து  தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது கூடியிருந்த  மக்களின் முழக்கங்கள் விண்ணை அதிரவைத்தன  அப்பொழுது பாபநாட்டில் மதுக்கூர் சகோதர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்த இனவெறியர்கள்  வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர்   இதனை கேள்விப்பட்ட அதிரை தமுமுகவினர் பட்டுகோட்டை மணிக்கூண்டு  அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர் சம்பவத்தை கேள்விப்பட்ட காவல்துறையினர் அவர்களை பாதுக்காப்பாக தஞ்சை செல்ல வழிவகை செய்தனர் 

Thursday, December 5, 2013

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

மேற்கு வங்காளம் ஒடிசா உத்தரபிரதேச மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.





     இந்த  மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,  கே.எஸ்.ராதாகிருஷ்ணன்ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது. உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு தற்போது வழங்கபடும் ஆறு மாதகால சிறைத்தண்டனை போதாது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என  நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.   

Tuesday, December 3, 2013

M.L.A. அவர்களின் உதவி


25.11.2013. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ
60,000 மதிப்புள்ள 


Photo: 25.11.2013. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூ 
60,000 மதிப்புள்ள 3 சக்கர Scooter மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது    3சக்கர  Scooter மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது
courtesy Facebook

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
... காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ 
courtesy Facebook