Thursday, December 5, 2013

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை

மேற்கு வங்காளம் ஒடிசா உத்தரபிரதேச மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் கலப்பட பால் குறித்து உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் கலப்பட பால் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது குறித்தும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.





     இந்த  மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி,  கே.எஸ்.ராதாகிருஷ்ணன்ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாலில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட பாலை விற்பனை செய்பவர்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் மாநில அரசுகள் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது. உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு தற்போது வழங்கபடும் ஆறு மாதகால சிறைத்தண்டனை போதாது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என  நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.   

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval