Friday, December 27, 2013

”இஸ்லாத்தின் உணமையான ஐந்து கடமைகள்”

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிற்றஹீம்

அல்லாஹ்,ரஸூல்,குர்ஆன்-ம் சொல்லும் நம் அனைவரின் செயல்களும்.

”இஸ்லாத்தின் உணமையான ஐந்து கடமைகள்”

இஸ்லாமிய மக்களே:

ஓர் உண்மையான விஷயத்தை நீங்கள் முதன்முறையாக பார்க்கவும்,படிக்கவும் போகின்றீர்கள்
கடந்த 1434 ஆண்டுகளாக கேட்ப்பாராக கிடந்த உண்மையையும் பரிகாசமாகவும்,ஏளனமாகவும் நாம்
ஆக்கிகொண்ட ஓர் உண்மையை உங்களுக்கு
காட்டுவதற்கு முன்பு உங்களிடம் ஓர் கேள்வியை
கேட்டு அந்த மாபெரும் உண்மையை சொல்கிறேன்.

மேலும் அந்த உண்மை உங்கள் ஒவ்வொரு வீட்டிலும்
இருக்கின்றது நீங்கள்தான் அதை ஏறெடுத்து பார்க்காமலும்,தொடாமலும் தூசியால் மறைக்கப்பட்டு
விட்டது.அதன்மீது சிறிது கூட ஆசையும் இல்லாமல்
போய்விட்டது.

கேள்வி: குர்ஆன் வசனங்களின்படி நாம் நடப்போமானால் சுவர்க்கம் செல்வோமா?
அல்லது குர்ஆனுடைய வசனங்களுக்கு மாறாக
நடப்பவர்கள் சுவர்க்கம் செல்வார்களா?

கேள்வி: ஒருவர் குர்ஆனை முறைபடி ஓதி, அதில்
கூறியபடி செயல்பட்டு நடந்தால் அவரை இஸ்லாமியனாக இருக்கின்றார் என்று கூறுவீர்களா?
அல்லது மற்றவர் செய்யும் செயலைப் பார்த்து
{உதாரணமாக தொழுகை,நோண்பு,ஹஜ்} அதன்படி
நடப்பவர்களை நீங்கள் அவர் இஸ்லாத்தில் இருக்கின்றார் என்று சொல்வீர்களா?

இவ்விரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்ல
வேண்டிய அவசியமில்லை.

ஆனால் நீங்கள் இப்பொழுது படிக்கப் போகும் அழிக்க முடியாத உண்மைகளை உங்கள் கண்களால் படிக்கும்போது நீங்கள் நிச்சயமாக உணர்ந்து கொள்வீர்கள் “நீங்கள் யார்? ” என்பதை அதாவது நாம்
“இஸ்லாத்தில் ” இருக்கின்றோமா? அல்லது
அல்லாஹ்வுக்கும்,குர்ஆனுக்கும்,ரஸூலுக்கும்
முதல்தரமான விரோதியாகவும்,ஷைத்தானுக்கு
நண்பனாகவும் இருக்கின்றோமா? என்பதை.

மேலும் ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகமில்லாமலும்,தெளிவாகவும் அறிந்து கொள்வீர்கள் இதுதான் உண்மை...

இப்பொழுது நான் உங்களுக்கு சொல்லும் ஒவ்வொன்றும் குர்ஆனிலிருந்தே சொல்லப்படுன்கிறது அதுமட்டும் அல்ல ஒவ்வொரு விஷயத்திற்கும் ஆதாரமாக குர்ஆனிலிருந்தே சூராவையும்,ஆயத்துக்களையும் பார்க்கப்போகின்றீர்கள்.
மேலும் உண்மை எது? என்பதையும் உண்மைக்கு விரோதமானது எந்த செயல்கள்? என்பதையும் வெகு சீக்கிரத்தில் கண்டுகொள்வீர்கள். மேலும் நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றியும்,அவனுடைய வேதனையைப் பற்றியும் பயந்து கொள்வீர்கள்.

உங்களுக்கு குர்ஆனைப் பற்றிய உண்மையை சொல்லிவிடுகிறேன் பின்னர் அல்லாஹ் குர்ஆனைப் பற்றி புகழ்வதையும்,ரஸூல் குர்ஆனைப் பற்றி கூறுவதையும் சொல்லுகின்றேன்.

“குர்ஆனைப் பற்றிய முதல் உண்மை”

இந்த குர்ஆனுக்கு நாண்கு {4} பெரிய சாட்சிகள் உள்ளன

1. ”அல்லாஹ்” தன் வசனங்களை
2. “ஜிப்ரில்” :- க்கு கொடுத்து
3. “ நபி முஹம்மது” அவர் நபிக்குச் சொல்லி
4. “குர்ஆன்” வஹீ மூலமாக அறிவிக்கப்பட்டதையெல்லாம் புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த 114 சூராக்களில் {அத்தியாயம்} உள்ள அனைத்து ஆயத்துக்களுக்கும்.மேலும் ஒவ்வொரு வசனமும் இந்த நாண்கு {4} பெரிய சாட்சிகளைக் கொண்டது ஆகும்
“மிக முக்கியமான உண்மை”
ஒரு உண்மையான முஃமின் அல்லது அல்லாஹ்வின் மீதும்,ரஸூல் மீதும்,பேரொளியான இந்த குர்ஆன் மீதும் நம்பிக்கை கொண்டவர், தான் சுவர்க்கம் செல்ல இந்த குர்ஆனிலிருந்து கட்டாயமாகச் செய்யவேண்டிய காரியங்கள் மொத்தம் 2567 விஷயங்கள் ஆகும்.
இந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விஷயங்கள் 1.அல்லாஹ் நமக்கு இட்ட கட்டளைகள்
2.கடமைகள்
3. உபதேசங்கள்
4.நல்ல அமல்கள்
5. தரும காரியங்கள்
6. இரவிலும்,பகலிலும் {24மணி நேரமும் }செய்யவேண்டிய கட்டாய தியாகச் செயல்கள்
ஆகியவற்றைக் கொண்டது ஆகும்.

”அர்த்தங்கள்:- மனிதர்களில் விதம் எட்டு {8}”

இன்னும் நாம் அடிக்கடி உபயோகப் படுத்தும் சில வார்த்தைகளுக்கு அர்த்தத்தை தெரியாமலேயே பேசுகிறோம் சிலவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்

1.முஃமின்:- ஈமான் அல்லது நம்பிக்கை கொண்டவர்
இது பெயரளவில் ஈமான் கொள்வது இத்தகையோர்: மற்றவர்களின் பேச்சைக் கேட்டும்,அவர்களின் செயல்களைப் பார்த்தும் அரைகுறையாக நடப்பவர்கள்.

2. முஃமின்:- நம்பிக்கை கொண்டவர்: இவர் குர்ஆனை அரபி மொழியில் மட்டும் ஓதி மூடிவிடுவார்கள் ”குர்ஆன் தர்ஜுமா” வை படிக்க மாட்டார்கள்.{அப்படியும் அர்த்தத்தோடு ஓதினாலும் எதுவும் புரியாது}

காரணம்: குர்ஆனை ஓதுவதற்கு ஆறு முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆறு வழிகளும் குர்ஆனிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

{ஆறு விபரங்களும் என்னவெண்று கேட்காதீர்கள் இவை யாவும் இங்கு{சென்னையில்} நடைபெற்று வரும் ”குர்ஆன் வகுப்பில்” கற்றுத்தரப் படுகிறது.இது ஓர் பெரிய பாடம் ஆகும் நான் இப்போது இதை எழுதினால் எழுதி முடிவு பெறாது.மேலும் இவற்றையெல்லம் சொல்லமுடியுமே தவிர எழுத முடியாது.ஏனென்றால் நான் உங்களுக்குச சொல்லபோகும் விஷயம் வேறு ஆதலால் சுருக்கமாக சொல்லி இருக்கிறேன்}

3. முத்தகீன்:- இதன் அர்த்தம் ”தக்வா” உடையவர்கள் அல்லது ”பயபக்தியாளர்கள்”

ஒருவர் பயபக்தியுடையவர்கள் ஆவதற்கு குறைந்த பட்சம் அதாவது குர்ஆனை ஓத ஆரம்பித்த தினத்திலிருந்து 15 வருடங்கள் வரை ஆகும் இந்த விஷயத்தை புரிந்து கொள்ள குர்ஆனை குறைந்தபட்சம் ஐந்து{5} முறையாவது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அதிக கவணத்துடனும்,முக்கியமான விபரங்களை நோட்டுபுத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டும் ஓதி வர வேண்டும்.
“குர்ஆன் வகுப்பில் நடத்தப்படும் பாடம்{SUBJECT} இதுதான்”{தொடரும்}
courtesy MZ KHAN B.A.B.L பாகம் ஒன்று {PART ONE}

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval