Sunday, December 29, 2013

அல் குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு

மனிதர்களே நீங்கள் உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு விதிக்கப் பட்ட நாள் வருவதற்கு முன்பு அவன் வேதத்தில் அவன் உங்களுக்காக உபதேசித்துள்ள அந்த உபதேசத்தின்படி வாழ பழகிக் கொள்ளுங்கள் இல்லையெனில் நீங்கள் பெரும் நஷ்டவாளிகளே!! 
அத்தியாயம் 1
அல் ஃபாத்திஹா

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையவனுமாகிய
அல்லாஹ்வின் பெயரால்.

1. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; அகிலங்களின் இறைவன்.

2. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.

3. அரசன் நாள் வழி. { இஸ்லாம் }

4. நிச்சயமாக உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; 

உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

5. எங்களை நேரான பாதையில் வழி நடத்துவாயாக.

6. நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி; 

உன் கோபத்திற்கு ஆளானோர் வழியும் அல்ல;

வழி தவறியோர் வழியும் அல்ல.

அத்தியாயம் 2
ஸூரத்துல் பகரா 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்.

1. அலிஃப் – லாம் – மீம்.

2. இது இறைவனின் வேதம் ; இதில் சந்தேகமே இல்லை; பயபக்தியுடையோருக்கு வழிகாட்டி.

3. அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; சலாத்தையும் நிலை நிருத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள்.

4. அவர்கள் உமக்கு அருளப்பட்டதின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்.

5. இத்தகையோர்தான் தங்கள் இறைவனின் வழியில் இருக்கின்றார்கள்; இவர்கள்தாம் நிச்சயமாக வெற்றிபெற்றவர்கள்.

6. நிச்சயமாக நீர் நிராகரிப்பவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் சமமே; அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்; 

7. இத்தகையோர் இருதயங்களின் மீதும், செவிப்புலன் மீதும் அல்லாஹ் முத்திரை வைத்துவிட்டான்; மேலும், இவர்களுடைய பார்வையில் ஓர் திரை கிடக்கின்றது; மேலும், இவர்களுக்கு கடினமான வேதனையும் உண்டு.

8. இன்னும், மனிதர்களில் “ நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுவோரும் இருக்கின்றனர்; ஆனால் அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

9. அவர்கள் அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்களேத் தவிர வேறில்லை; எனினும், அவர்கள் உணர்ந்துக் கொள்ளவில்லை.

10. அவர்களுடைய இதயங்களில் நோயுள்ளது அல்லாஹ் நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்கு துண்பம் தரும் வேதனையும் உண்டு.
courtesy MZ KHAN B.A.B.L

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval