Monday, December 16, 2013

குளிர்காலத்தில் கடைபிடிக்கும் சில ஆரோக்கிய பழக்கங்கள்

குளிர்காலம் வந்துவிட்டது, அக்டோபர் மாதத்தின் வெயில் தீபாவளிக்குப் பின்னர் வேகமாக குறைந்து, உதறலெடுக்கும் குளிர்காலம் தொடங்கி விட்டது. இந் நாட்களில், உங்கள் சருமம் வறண்டு போகும், முடிகள் உறைந்து விடும் மற்றும் உடலின் தினசரி நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத் துவங்கும்.

இந்த மாற்றங்களை எதிர் கொள்ள சற்றே அதிகமான கவனமும், கவனிப்பும் வேண்டும். ஏனெனில், குளிர் காற்று உடலுக்கு எப்பொழுதும் நல்லதல்ல. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பெரிதும் பாதிக்கும் வகையில் இந்த குளிர்காலம் அமைந்து விடுகிறது.

கடும் வெயிலையும் தாங்கி கொள்ளும் இந்த உடல் குளிர்காலத்தில் பாடாய்படுத்தி விடுகிறது. இனி வரும் இரண்டு மாத குளிரை சமாளித்து நோயற்ற வாழ்வை பெற நாம் முயற்சிக்க வேண்டும்.

எனவே உங்கள் உடல் நலன் பாதிக்கப்படாமல் இருக்கவும் மற்றும் குளிர் காலத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவும் நீங்கள் சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. குளிர்காலத்தில் உடல் நலனைப் பாதுகாக்க செய்ய வேண்டிய சில குறிப்புகள் உங்களுக்காக...

சத்தான உணவு :

குளிர்காலங்களில் சளி மற்றும் இருமலைத் தூண்டும் உணவுகளை நீங்கள் சாப்பிட வேண்டாம். ஐஸ் கிரீம், குளிர் பானங்கள் மற்றும் உடல் வெப்பநிலையை விட குறைந்த வெப்பநிலையுடைய உணவுகள் எதையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

குறைவாக சாப்பிடவும்  :

குளிர்காலத்தில் அதிகம் பசி எடுக்கும், எனவே அதிகம் சாப்பிடத் தோன்றும். ஆனால் அவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும். அதன் மூலம் செறிமாணம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். உடல் வெப்பநிலையை சரியாக வைத்திருக்க உதவும் உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தொடர்ச்சியான உடற்பயிற்சி :

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கவும். குளிர்காலத்தில் சூரிய உதயம் தாமதமாகவே நிகழும், எனவே குளிர் நம்மை படுக்கையின் கதகதப்பிலிருந்து எழுந்திருக்க விடாது. எனவே, சோம்பலுடன் தாமதமாக எழுந்து நாள் முழுவதும் சோம்பலாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டாக, தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பின்பற்றவும்.

சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி :

சாப்பிட்ட உடனேயே தூங்கச் செல்ல வேண்டாம், இதன் மூலம் சோம்பல் ஏற்படும். சாப்பிட்ட பின்னர், குறிப்பாக இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும்.

மாய்ஸ்சுரைசர் :

குளிர்காலத்தில் சருமம் பகுதி வறண்டு காணப்படும். இதனை தவிர்ப்பதற்கு பால் கலந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தவும். நாளுக்கு ஒருமுறையாவது இவற்றை நீங்கள் உடலில் தடவ வேண்டும்.

குளிர்கால உடை :

குளிர்காலத்தில் மொத்தமான உடைகளை பயன்படுத்துங்கள். வெளியே செல்லும் போது காதுகள் மற்றும் பாதங்களை குளிர்காற்று படாமல் மூடியபடி செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஜலதோஷம் மற்றும் குளிர்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நோய்கள் :

குளிரினால் நோய்கள் வந்தால் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும். சுகாதாரமான உணவு, அதிகமான ஓய்வு மற்றும் குளிர்கால புண்கள் உள்ள மற்றவர்களின் தொடர்புகளிலிருந்து விலகியிருத்தல் ஆகியவற்றால் நோய்கள் வருவதை தவிர்க்க முடியும்.

தியானம் :

மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்யுங்கள். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

சூடான பானங்கள் :

சூப் மற்றும் பிற சூடான பானங்களை உட்கொள்ளவும். அவை குளிர்காலத்தில் மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். குளிர்காலம் முழுவதுமே இந்த பானங்களை பருகினால் குளிர் போயோ போச்சு!

காரம் கொஞ்சம் தேவை :

உடலை கதகதப்பாக வைத்திருக்க நிறைய மிளகாய் மற்றும் பிற காரங்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். இது உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தி, உடலை சராசரி வெப்பநிலையில் வைத்திருக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் :

குளிர்காலங்களில், ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் உடல் கதகதப்பாக இருக்கும். பரங்கிக்காய், உருளைக்கிழங்கு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள்.

வைட்டமின் `டி' :

குளிர்காலத்தில் சூரிய வெளிச்சம் போதிய அளவில் உடலில் படாத காரணத்தால். வைட்டமின் `டி' பற்றாக்குறை ஏற்படும். எனவே, சாப்பிடும் உணவில் வைட்டமின் `டி' உள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டு, வைட்டமின் டி பற்றாக்குறையை தவிர்க்கவும்.

தண்ணீர் : சருமம் வறண்டு போவதைத் தவிர்க்க குளிர்காலத்தில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் போதிய தண்ணீர் அளவை பராமரிக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது நிதர்சன உண்மை தானே!

சன் ஸ்க்ரீன் :

குளிர்காலத்தில் சூரியனின் கதிர்கள் குறைந்த அளவே இருப்பதால், சற்றே முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எனவே எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் சருமம் பழுப்படைவதையும் மற்றும் எரிச்சலை தவிர்க்கவும் சன் ஸ்கீரீன்களை பயன்படுத் தவும்.

ஆற்றலுக்கு முன்னுரிமை :

உங்களுடைய மனநிலை மற்றும் ஆற்றலை எப்பொழுதும் உயர்வாக வைத்திருங்கள். குளிர்காலம் சுற்றுச்சூழலை டல்லாக வைத்திருந்து, உங்களுடைய ஆற்றலை மட்டுப்படுத்தி வீணாக்கி விடும். இவையெல்லாம், குளிர் காலத்தில் உடல் நிலையை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான குறிப்புகள். இவைகளைப் பின்பற்றி பயன் பெறுங்கள்.
courtesy;Malaimalar

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval