சளியோடு இரத்தம் வெளியேறுதல்
இருமும் போது சளியுடன் இரத்தம் வெளியேறுதல் பல நோய்களால் ஏற்படலாம்.சளியுடன் ரத்தம் வெளியேறுதல் மருத்துவ ரீதியாக ஹீமொப்டிசிஸ் (Hemoptysis) எனப்படும்.அவ்வாறா ன நோய்கள் நியுமோனியா மற்றும் சுவாசப்பைக் கிருமித் தொற்றுக்கள்காசநோய் (T.B)சுவாசப்பை புற்று நோய்கள் இவை தவீர இன்னும் ஏராளமான அரிதான நோய்கள் இருக்கின்றன. ஆனாலும் சளியுடன் ரத்தம் வெளியேறும் ஒருவருக்கு மேலே சொன்ன நோய்களில் எதுவும் இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட வேண்டும். ஆகவே உங்களுக்கு ஒருதடவையேனும் சிறிதளவான அளவு இரத்தம் சளியோடு வெளியேறினால் கூட உடனடியாக வைத்தியரிடம் செல்ல வேண்டியது அவசியமாகும்.
பித்தப் பைக்கற்கள் (Gallstone)
பித்தப் பை (Gall bladar)எனப்படுவது எமது உடலிலே பித்தத்தை(bile) தற்காலிகமாக சேகரிக்கும் உறுப்பாகும்.இவ்வாறு பித்தைப்பையிலே சேகரிக்கப்படும் பித்தமானது ஒரு குழாய் மூலம் சிறுகுடலை வந்தடைந்துஉணவு சமீபாட்டிற்கு உதவும்.பித்தத்தில் உள்ள சில பதார்த்தங்களின் சேர்க்கையால் கற்கள் உருவாகலாம்.இவை பொதுவாக பித்தப் பைக் கற்கள் எனப்படும்.இந்தக் கற்கள் பித்தப் பையினுள்ளே காணப்படலாம் அல்லது பித்தக் குழாயினுள்ளே (பித்தத்தைபித்தப் பையிலிருந்து சிறுகுடலுக்கு கொண்டு சேர்க்கும் குழாயினுள்ளே) காணப்படலாம்.பித்தப் பைக் கற்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகமாக கொண்டவர்கள்.பெண்கள் உடற் பருமனானவர்கள் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பித்தப் பைக் கற்கள் உள்ள எல்லோரிலும் அவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அதாவது பித்தப் பைக் கற்கள் உள்ளவர்களில் சில பேரிலே அது பாதிப்பை ஏற்படுத்த மற்றவர்கள் வாழ்க்கை முழுவதும் சாதாரணமானவர்களாக இருப்பார்கள்.பித்தப் பைக் கற்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்கள்...