திருமணம் முடிந்த அடுத்த நாளே சிறைக்குச் சென்ற அதிரை தியாகி
!பெரும்பாலான பாமர மக்களிடம் சுதந்திர தினம் என்றால் என்ன என்று கேட்டால் கொடி ஏற்றி மிட்டாய் கொடுக்கும் தினம் என்று தங்களளறியாமையை வெளிப்படுத்துவர்.
ஆனால் சுதந்திர போரட்டத்திற்காக போரடியவர்களின் வாழ்க்கையில் எத்தனயோ தியாகங்கள் அவர்களில் தியாகி s.s.இபுறாகீமும் ஒருவர்.இவர்களை திருமணமான அடுத்தநாள் பிரிட்டிஸ் அரசு கைது செய்து பாளையங் கோட்டை ஜெயிலில் அடைத்தது அப்போது அவர்களுடன் ஜெயிலில் இருந்தது முன்னால் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்கள்.
அந்த காலத்தில் திருமணம் முடிந்தால் மாப்பிள்ளை அழைப்பு; பெண் அழைப்பு எல்லாம் உண்டு. "இவை எதுவுமே எனக்கு இல்லை 6 மாதம் ஜெயிலில் தண்டனை அன்பவித்தவன் நான்" என்று என்னிடத்தில் பெரிய ஜும்மா பள்ளியில் வைத்து ஒருமுறை சொன்னார்கள்.
மேலும் பின்னாலில் நமதூருக்கு வந்த காமராஜர் இவர்களை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறினார்கள்.
இப்படிப்பட்ட தியாக செம்மல்களை இந்நாளில் நினைவு கூறுவோம்.
தகவல் ;N ,K ,M , அப்துல் வாஹித் அண்ணாவியார்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval