நியூயார்க் நகரில் பல நாட்டு மக்களும் பல துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு சர்வதேச கலாச்சாரத்தையும் காண முடியும். உற்றார், உறவினரை பிரிந்து பணியின் நிமித்தமாக வாழும் வெளிநாட்டினரை ஜான் என்ற அமெரிக்க வெள்ளைக்காரர்( interview) நேர்காணல் செய்தார்.
அதில் நமதூர் சகோதரர் ராஜிக் அவர்களும் ஒருவர். ஒரு நியூஸ் ஸ்டாண்டில் பணிபுரியும் அவரிம் நடத்திய நேர்காணல் இதோ: |
இணையத்தின் குரல் Voice of Journalism போற்றுவோர் போற்றற்றும் தூற்றுவோர் தூற்றற்றும் என்றும் எம் வழி நல்வழியே
Sunday, September 8, 2013
அமெரிக்காவில் அதிரையரின் நேர்காணல்
நல் ஆசிரியர் விருது
நமதூர் காதிர் முகைதீன் பள்ளியில் மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுனையாக இருந்து சிறந்த முறையில் பணியாற்றி பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் 100% சதவீதம் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர் ஜனாப் A.L.அஷ்ரப் அலி M.Sc., M.Phil., B.Ed அவர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தங்க விளக்கானாலும் தூண்டுகோள் அவசியம் என்பதுபோல் இப்படிப்பட்ட நல் ஆசிரியர்களை இணங்கண்டு விருது வழங்கிய லயன்ஸ் சங்கம் பாராட்டுக்குரியது விருதுபெற்ற நல் ஆசிரியருக்கு வாழ்த்துக்களும் துவாவும்.
Saturday, September 7, 2013
மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்
அந்த மாதுளம் பழம் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவக் குணத்தைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது என்று இப்போதுதான் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
வில்லோ மரத்திலிருந்து ஆஸ்பிரின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்குச் சமமானது இந்தக் கண்டுபிடிப்பு என்று கூத்தாடுகிறது லண்டனிலிருந்து வெளியாகும் சண்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ்.
மாதுளம் பழத்தைச் சாப்பிடுகிறவர்கள்கூட அதன் கதுப்புகளை உட்கொண்டு கொட்டையைத் துப்பிவிடுகின்றனர். அதன் ரசத்தை மட்டுமே குடிக்கின்றனர்.
ஆனால் அதன் தோல்,விதை, மஞ்சள் நிறத்தில் உள்ளே காணப்படும் மெல்லிய சவ்வுப்படலம், அதன் பட்டை, செடியின் தண்டுக்குள்ளே இருக்கும் சோறு என்று அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது.
அவற்றிலிருந்து எடுக்கப்படும் சாறு இதயத் துடிப்பைச் சீராக்கும், இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும், ரத்தக் கொதிப்பைக் குறைக்கும், உள் உறுப்புகளின் வீக்கத்தைக் கட்டுப்படுத்தி போக்கும், புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்.
மாதுளம் பழத்தின் அரிய மருத்துவத் தன்மைகள் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவர்களுக்கு வேண்டுமானால் இப்போது தான் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆயுர்வேதமும் சித்த வைத்தியமும் அதன் பலனை ஏற்கெனவே உணர்ந்தவைதான்.
தகவல்; ஷவ்க்கத்
BOSTON -MA ...U .S .A .
|
Friday, September 6, 2013
தண்ணீர்! – தெரியாமல் போன நல்ல விஷயங்கள்
குடி தண்ணீர் கேட்டு நாம், பக்கத்தில் உள்ள ஆந்திரா, கேரளா மற்றும் கர் நாடகா மாநிலங்களிடம் அன்றாடம் போராடி பெற்று வருகிறோம். ஆனால் அந்த குடி தண்ணீரை ஒழுங்காக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லையே! சரி அந்த குடி தண்ணீரால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது என்பதாவது நாம் தெரிந்து வைத்துக்கொண்டு நமது உடல் நலத்தை பேணுகிறோமா என்றால் அதுவும் இல்லையே!
ஏதோ, தாகம் எடுக்கும் போது, மொடுக் மொடுக் என்று இரண்டொரு டம்ளர் குடிக்கி றோம். அதன்பின் சாப் டும் போதும், சாப்பிட்ட பின்பும் சிறிதளவு தண்ணீரை அருந்துகிறோம். ஆனால், மேல்நாட்டு நாகரீகத்தின் மீது கொண்டுள்ள அதீத மோகத்தால், பன்னாட்டு நிறுவனங் களின் குளிர்பானங்களை கையிலேந்தி, அதையும், ஸ்டைலாக குடித்து வருகிறோம். அந்த குளிர்பானங்கள், எந்தளவு நமது உடலுக்கு கேடுகளை விளைவிக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. சிலர் தெரிந்திருந்தும், பகட்டுக்காக குடித்து அவர்களது உடலை அவர்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.
இங்கே பாருங்கள். வெறும் தண்ணீரால் நமது உடலுக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படுவதை பாருங்கள்.
தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பள பளக்க செய்யும். தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது.
உண்மையை உணர மறுக்கும் உலகம்
உண்மையை உணர மறுக்கும் உலகம்
மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன. ( அல்குர் ஆன் 98 : 2,3)
சமீபகாலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகமாகி வருவதையும், பெண்கள் கற்பழிப்பு மற்றும் பலவித தொந்தரவுகளுக்கு ஆளாவதையும் செய்தித்தாள்கள் வழியாகவும், தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் வழியாகவும் அறிந்து வருகின்றோம்.
பெண்களுக்கு எதிரான இத்தகைய பாலியல் குற்றங்கள் நடப்பதற்கும், இருக்க இருக்க இத்தகைய குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும் அவர்கள் அணியக்கூடிய கவர்ச்சியான ஆடைகள்தான் 99சதவீதம் காரணம் என்பதை அறிவுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் இந்த உண்மையை ஆட்சியாளர்களும், அறிவுஜீவிகளும், பெண்ணுரிமை பேசக்கூடியவர்களும் உணர மறுப்பதுதான் வேதனையிலும் வேதனை.
Wednesday, September 4, 2013
லிபரான் அறிக்கை
லிபரான் கமிஷன் அறிக்கை கூட்டுச் சதி அம்பலம்
சதிகார நரசிம்மராவ் ஆட்சியின் போது 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி திட்டமிட்டு இடித்து தகர்க்கப்பட்டது. இடித்தவர்கள் சங்பரிவார சதிகாரர்கள் என்றாலும் காங்கிரஸ் கயவர்களுக்கும் இதில் சமபங்கு இருந்தது என்பதை நாடே அறியும். தேதி குறித்து விட்டு, கடப்பாரையால் கரசேவை நடத்தப்படும் என்று சவால் விட்டு விட்டு ஒரு கும்பல் சட்ட விரோதமாகக் கூடும்போத் அதற்கு மாநில அரசு துணையாக நிற்கிறது என்றால் மத்திய அரசின் கடமை என்ன? ஒரு உத்தரவில் மாநில அரசைக் கலைத்து விட்டு அதிகாரத்தைக் கையில் எடுத்து பள்ளிவாசலைக் காப்பாற்றியிருக்க வேண்டும்.
பள்ளிவாசல் இடிக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸின் ஆசையாகவும் இருந்ததால் இடிக்கும் வரை நரசிம்மராவ் அரசு வேடிக்கை பார்த்தது. பள்ளிவாசல் இடிக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று காங்கிரஸ் கயவர்கள் சொன்னது மறு நாளே பொய்யானது. பள்ளிவாசல் இடிக்கப்படும் போது கல்யான் சிங் ஆட்சி இருந்தாலும் இடித்த பின் மாநில அரசு கலைக்கப்பட்டது. உடனே அந்த இடத்தில் எந்தக் கட்டுமானப்பணியும் நடக்காமல் தடுத்திருக்க வேண்டும். சதிகார நரசிம்மராவ் அதிகாரத்தைக் கையில் எடுத்தவுடன் இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகக் கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்டது கல்யாண் சிங் ஆட்சியில் என்றால் தற்காலிகக் கோவில் கட்டப்பட்டது காங்கிரஸ் கயவர்களின் ஆட்சியில் என்பதை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள். இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தரப்படும் என்று சதிகார நரசிம்மராவ் பிரதமர் என்ற அடிப்படையில் வாக்குறுதி கொடுத்தார்.
அப்போது முஸ்லிம்களின் கோபத்தை தணிப்பதற்காகச் சொன்ன பொய் வாக்குறுதி என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது. பள்ளிவாசலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு சங்பரிவார இயக்கத்தைத் தடை செய்ததுடன் இஸ்லாமிய இயக்கங்களையும் தடை செய்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார் நரசிம்மராவ். எந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் எல்லா அயோக்கிய அரசியல்வாதிகளும் இந்த வழிமுறையைத் தான் கையாள்கின்றனர். இரண்டு பேருக்கு மத்தியில் சரிக்குக் சரியாக சண்டை நடக்கும் போது இருவரும்
Tuesday, September 3, 2013
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் K.S.P. முஹம்மது செரீப் அவர்களின் மகனும், M.A.C. முத்து மரைக்காயர், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது, மர்ஹூம் M.A.C. பக்கீர் முஹம்மது ஆகியோரின் மருமகனும், பிலால் செரீப், செய்யது அபுதாஹிர் ஆகியோரின் தகப்பனாரும், A. தாஜுதீன் அவர்களின் மாமாவும், M.A.C. அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் மச்சானுமாகிய கோல்டன் நிஜாம் அவர்கள் காலமாகி விட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு
நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.
ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.
எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.
இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.
இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.
உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.
தகவல் :ஷவ்க்கத்
BOSTON-M .A . U .S .A .
64 வயது பெண்ணின் நீச்சல் சாதனை
சாதனை புரிவதற்கு வயது ஓரு தடையல்லை என்பதை 64 வயதான DIANA NYAD என்ற அமெரிக்க நீச்சல் வீராங்கனை நிரூபித்துள்ளார்.இவர் கியூபா நாட்டிலுள்ள ஹவானா என்ற இடத்திலுருந்து அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திற்கு 110 மைல்களை 53 மணி நேரம் நீந்தி சாதனை படைத்துள்ளார் கியூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு நீந்திய முதல் சாதனையாளர் என்ற பெருமையையும் பெற்றார்.இவரின் உணவு,நீருடன் பாது காப்பாளர்கள் 5 படகுகளில் பின் தொடர்ந்து வந்தனர்.4 முறை தோல்வியற்று ஐந்தாவது முறையே வெற்றி பெற்றார்.பாதுகாப்பு சாதணங்கள் அணியாமல் வெறும் நீச்சல்உடையுடன் மட்டுமே நீந்தி வந்தார் எண்பது குறிப்பிட தக்கது.இவர் கரையை வந்தடைந்தும் திரளான மக்கள் கூடி வரவேற்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.கூட்டத்தினரை பார்த்து கை அசைத்து மகிழ்ந்தார் பின்னர் பரி சோதனைக்காக மருத்துவமனைஅழைத்து செல்லபட்டார் அந்த சாதனைப் பெண்.
Monday, September 2, 2013
அலர்ஜியைத் தடுக்கும் மீன்
மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14 ,
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.
அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை
அறிய பொக்கிஷங்கள்
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய செருப்பு
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(LEATHER SANDALS OF PROPHET MUHAMMED -Topkapi Museum, Istanbul - Turkey)
கஃபாவில் உள்ள கருப்பு கல்லின் தங்கத்திலான பழைய மூடி
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(GOLD COVER OF THE BLACK STONE IN KAABA - Topkapi Museum, Istanbul - Turkey)
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(GOLD COVER OF THE BLACK STONE IN KAABA - Topkapi Museum, Istanbul - Turkey)
ஜம்ஜம் தண்ணீர் எடுக்க பயன்படுத்தபட்ட கப்பி மற்றும் பித்தளையிலான வாளி
(Pulley and brass bucket for lifting ZamZam water)
(Pulley and brass bucket for lifting ZamZam water)
முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய வாள்
(SWORD OF PROPHET MUHAMMED)
(SWORD OF PROPHET MUHAMMED)
ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
ஸஹாபாக்கள் பயன்படுத்திய வாள்கள்
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(SWORDS OF KHALIFA SAHABIS)
Topkapi Museum , Isanbul - Turkey
(டாப்காப்பி அருங்காட்சியகம், இஸ்தான்புல்-துருக்கி)
(SWORDS OF KHALIFA SAHABIS)
Topkapi Museum , Isanbul - Turkey
Sunday, September 1, 2013
வாழ்த்தும் நண்பர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்
(1) தங்களின் இம்முயற்ச்சி பெரும் வெற்றி பெற துஆக்கல் பல....ஆமீன்..
ஷவ்கத் அலி
(BOSTON . M A) .U .S .
----------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------
(2) Muhiyadeen Sahib Mysha 2:39pm Aug 27 புதிதாக துவங்கியுள்ள தாங்களின் ''அதிரை அண்ணாவியார்'' வலைத்தளம் புதுப்பொலிவுடன் திகழ்ந்து நல்ல பல பயனுள்ள பதிவுகளை பதிந்து அனைவரும் போற்ற நர்ப்பேறு பெற்று சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள்
----------------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அழைக்கும்
நீங்கள் ஆரம்பம் செய்துள்ள இந்த வலைத்தளம் மென்மேலும் வளர என்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
அஹ்மத் அமீன்
-------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அழைக்கும்
நீங்கள் ஆரம்பம் செய்துள்ள இந்த வலைத்தளம் மென்மேலும் வளர என்
இதயம் கனிந்த மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் !!!!!!!
அன்புடன்
மு . அப்துல் ஜலீல், துபாய்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)





.png)