Wednesday, September 4, 2013

லிபரான் அறிக்கை

    
லிபரான் கமிஷன் அறிக்கை கூட்டுச் சதி அம்பலம் 

சதிகார நரசிம்மராவ் ஆட்சியின் போது 1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி திட்டமிட்டு இடித்து தகர்க்கப்பட்டது. இடித்தவர்கள் சங்பரிவார சதிகாரர்கள் என்றாலும் காங்கிரஸ் கயவர்களுக்கும் இதில் சமபங்கு இருந்தது என்பதை நாடே அறியும். தேதி குறித்து விட்டு, கடப்பாரையால் கரசேவை நடத்தப்படும் என்று சவால் விட்டு விட்டு ஒரு கும்பல் சட்ட விரோதமாகக் கூடும்போத் அதற்கு மாநில அரசு துணையாக நிற்கிறது என்றால் மத்திய அரசின் கடமை என்ன? ஒரு உத்தரவில் மாநில அரசைக் கலைத்து விட்டு அதிகாரத்தைக் கையில் எடுத்து பள்ளிவாசலைக் காப்பாற்றியிருக்க வேண்டும். 

பள்ளிவாசல் இடிக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸின் ஆசையாகவும் இருந்ததால் இடிக்கும் வரை நரசிம்மராவ் அரசு வேடிக்கை பார்த்தது. பள்ளிவாசல் இடிக்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று காங்கிரஸ் கயவர்கள் சொன்னது மறு நாளே பொய்யானது. பள்ளிவாசல் இடிக்கப்படும் போது கல்யான் சிங் ஆட்சி இருந்தாலும் இடித்த பின் மாநில அரசு கலைக்கப்பட்டது. உடனே அந்த இடத்தில் எந்தக் கட்டுமானப்பணியும் நடக்காமல் தடுத்திருக்க வேண்டும்.  சதிகார நரசிம்மராவ் அதிகாரத்தைக் கையில் எடுத்தவுடன் இடிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகக் கோவில் கட்டப்பட்டது. இடிக்கப்பட்டது கல்யாண் சிங் ஆட்சியில் என்றால் தற்காலிகக் கோவில் கட்டப்பட்டது காங்கிரஸ் கயவர்களின் ஆட்சியில் என்பதை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள். இடித்த இடத்தில் பள்ளிவாசல் கட்டித் தரப்படும் என்று சதிகார நரசிம்மராவ் பிரதமர் என்ற அடிப்படையில் வாக்குறுதி கொடுத்தார்.

 அப்போது முஸ்லிம்களின் கோபத்தை தணிப்பதற்காகச் சொன்ன பொய் வாக்குறுதி என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரிந்தது. பள்ளிவாசலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கொண்டு சங்பரிவார இயக்கத்தைத் தடை செய்ததுடன் இஸ்லாமிய இயக்கங்களையும் தடை செய்து, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார் நரசிம்மராவ். எந்தக் கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் எல்லா அயோக்கிய அரசியல்வாதிகளும் இந்த வழிமுறையைத் தான் கையாள்கின்றனர். இரண்டு பேருக்கு மத்தியில் சரிக்குக் சரியாக சண்டை நடக்கும் போது இருவரும்
இனிமேல் சண்டை போடக் கூடாது என்ற அறிவுரை ஏற்கக் கூடியது தான். ஆனால் ஒரு ரவுடி அப்பாவி ஒருவனை மாமூல் கொடுக்கவில்லை என்பதற்காக அடிக்கிறான். இருவரும் இனிமேல் அடித்துக் கொள்ளக் கூடாது என்று இப்போது ஒருவன் அறிவுரை கூறினால் அவன் அடித்த ரவுடியை விட அயோக்கியன். அடித்தவனையும் அநியாயமாக அடிக்கப்பட்டவனையும் சம நிலையில் நிறுத்தும் வகையில் அயோக்கிய நரசிம்மராவ் முஸ்லிம் இயக்கங்களையும் தடை செய்தார். முஸ்லிம் இயக்கங்கள் போட்டியாக கோவிலை இடித்தது போன்ற தோற்றத்தை காங்கிரஸ் கயவர்கள் ஏற்படுத்தினார்கள். அடுத்து நடவடிக்கை என்ற பெயரில் லிபரான் என்ற சோம்பேறி நீதிபதி தலைமையில் நரசிம்மராவ் ஒரு கமிஸ்ஹனை அமைத்தார். 

பள்ளிவாசலை இடித்தவர்கள் யார் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள், நேரடி சாட்சியங்கள் இருந்தும் இந்தியாவில் உள்ள குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வழிவகை இருந்தும் இதை விசாரிக்க நீதிபதி லிபரான் ஆணையம் ஒரு கமிஷனையும், பள்ளிவாசல் இடிக்கப்பட்டு பத்தாம் நாளில் நியமித்தார். கமிஷன் கண்டு பிடிக்கும் அளவுக்கு ஒளிவு மறைவாக இந்தச் சதிச் செயல் நடக்கவில்லை. உலகறிந்த விதத்தில் ஒரு கொடுஞ் செயலை அரங்கேற்றியவர்கள் யார் என்று சிறுபிள்ளைக்கும் தெரியும். அனைவருக்கும் தெரிந்த இதை மீண்டும் தெரிந்து கொள்வதற்காக மூளை வரண்ட நரசிம்மராவ் கமிஷன் அமைத்து நாடகமாடினார். நீதிபதியின் கண்ணியத்தையே குலைக்கும் வகையில் லிபரான் 17 ஆண்டுகள் விசாரித்து, பல கோடி ரூபாய்களைப் பாழாக்கி ஒரு அறிக்கையை ஜூன் மாதம் அரசிடம் தாக்கல் செய்தார். 

அந்த அறிக்கையை, அதன் பின் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அரசு முன் வைக்கவில்லை. கிருஷ்ணா கமிஷன் அறிக்கையைக் கிடப்பில் போட்டது போலவே அந்த அறிக்கையையும் கிடப்பில் போடத் திட்டமிட்டது. லிபரான் அறிக்கையில் கூறப்பட்ட சில விஷயங்கள் பத்திரிகைகளில் வெளியானதால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலைமை ஏற்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வாஜ்பேய், அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங் மற்றும் சங்பரிவார சதிகாரர்கள் உள்ளிட்ட 68 பேருக்கு பங்கு உள்ளது என்றும், இது இவர்கள் திட்டமிட்டு நடத்திய சதி என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் குற்றவாளிகள் என்று கூறிய நீதிபதி லிபரான் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி தெரிவிக்கும் போது கூட்டுச் சதியில் தன்னையும் இணைத்துக் கொள்கிறார். வாஜ்பேய், அத்வானி கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் தேர்தலில் போட்டியிடாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் நீதி வழங்காமல் வகுப்புக் கலவரங்கள் நடக்காமல் இருக்க ஆலோசனை கூறுகிறார். 

அதாவது பள்ளிவாசலை இடித்தவர்களையும் பறி கொடுத்த முஸ்லிம்களையும் நரசிம்மராவைப் போல் சம நிலையில் வைத்து கேடு கெட்ட பரிந்துரையை லிபரான் செய்திருக்கிறார். பள்ளிவாசல் இடிக்கப்பட்ட தற்கால சங்பரிவாரையும் முஸ்லிம் இயக்கங்களையும் சம நிலையில் வைத்து நரசிம்மராவ் தடை செய்தது போலவே, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளையும் சமநிலையில் வைத்து பேசுகிறார் லிபரான். குற்றவாளிகள் மீது நடவடிக்கை பற்றி பரிந்துரை செய்யாமல் உபதேசங்கள் செய்யும் லிபரான், பள்ளிவாசலை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்பதையாவது சொல்லி இருந்தால் அவரை நீதிமான் என்று நம்பலாம். மொத்தத்தில் பள்ளிவாசல் இடிக்கப்பட்டபோது முஸ்லிம்கள் எந்த அளவுக்கு காயப்படுத்தப்பட்டார்களோ அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு இந்த அறிக்கையின்போதும் காயப்படுத்தப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் போது அரசின் நிலை பாட்டை விளக்கும் அறிக்கையையும் சேர்த்து வைப்பது வழக்கம். அதனடிப்படையில் லிபரான் அறிக்கையுடன் அரசு நடவடிக்கை அறிக்கையை வைத்தது. யார் மீதும் நடவடிக்கை எடுக்கமாறு லிபரான் கமிஷன் பரிந்துரைக்கவில்லை என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என்று சங்பரிவார ஏஜெண்டும் நரசிம்மராவின் தம்பியுமான சிதம்பரம் கூறியுள்ளார். மத வன்முறையைத் தடுக்க சட்டம் இயற்றப்படும். ரேபரேலியில் உள்ள வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்றெல்லாம் இது வரை ஆயிரம் முறை சொன்னதை மீண்டும் கூறியுள்ளது காங்கிரஸ் தலைமையில் அமைந்த மத்திய அரசு. பள்ளிவாசல் இடிப்பிலும், இடித்தவர்களைக் காப்பாற்றுவதிலும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழியைப் போடுவதிலும் வாஜ்பேய், அத்வானி, நரசிம்மராவ், சோனியா, மன்மோகன் சிங், சிதம்பரம் நீதிபதி லிபரான் அனைவரும் கூட்டுச் சதி செய்துள்ளனர் என்று தான் முஸ்லிம்கள் நினைக்கின்றனர். கமிஷன் பரிந்துரை செய்யாவிட்டாலும் கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நாட்டில் குற்றவியல் சட்டங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் உறுதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே முஸ்லிம்கள் திருப்தியடைவார்கள். 

நரசிம்மராவின் செயலுக்கு சோனியா காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்ட பிறகுதான் படிப்படியாக முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரஸ் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளது. ஆனால் மன்னிப்பு கேட்டது ஒரு நாடகம் தான். இந்த விஷயத்தில் நான் நரசிம்மராவின் பேத்தியாக நடப்பேன் என்று சோனியா சொல்லாமல் சொல்லி விட்டார். காங்கிரஸ் கயவர்களை இனிமேல் நம்பவே கூடாது என்பது அரசின் நடவடிக்கை அறிக்கை மூலம் தெளிவாகிவிட்டது. இந்த அறிக்கை எப்படி கசிந்தது என்பது தான் பிரச்சனை என்பது போல் அனைத்து அயோக்கியர்களும் கூட்டு முடிவு எடுத்து விட்டனர்

நன்றி:ONLINE PJ.COM
தகவல்:N.K.M.புரோஜ்கான் அதிரை



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval