Friday, September 6, 2013

தண்ணீர்! – தெரியாமல் போன நல்ல‍ விஷயங்கள்

குடி தண்ணீர் கேட்டு நாம், பக்க‍த்தில் உள்ள‍ ஆந்திரா, கேரளா மற்றும் கர் நாடகா மாநிலங்களிடம் அன்றாடம் போராடி பெற்று வருகிறோம். ஆனால் அந்த குடி தண்ணீரை ஒழுங்காக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லையே! சரி அந்த குடி தண்ணீரால் என்னென்ன நன்மைகள் நமக்கு ஏற்படுகிறது என்பதாவது நாம் தெரிந்து வைத்துக்கொண்டு நமது உடல் நலத்தை பேணுகிறோமா என்றால் அதுவும் இல்லையே! 

ஏதோ, தாகம் எடுக்கும் போது, மொடுக் மொடுக் என்று இரண்டொரு டம்ளர் குடிக்கி றோம். அதன்பின் சாப் டும் போதும், சாப்பிட்ட‍ பின்பும் சிறிதளவு தண்ணீரை அருந்துகிறோம். ஆனால், மேல்நாட்டு நாகரீகத்தின் மீது கொண்டுள்ள‍ அதீத மோகத்தால், பன்னாட்டு நிறுவனங் களின் குளிர்பானங்களை கையிலேந்தி, அதையும், ஸ்டைலாக குடித்து வருகிறோம். அந்த குளிர்பானங்கள், எந்தளவு நமது உடலுக்கு கேடுகளை விளைவிக்கின்றன என்பது பலருக்கு தெரியாது. சிலர் தெரிந்திருந்தும், பகட்டுக்காக குடித்து அவர்களது உடலை அவர்களே கெடுத்துக் கொள்கிறார்கள்.


இங்கே பாருங்கள். வெறும் தண்ணீரால் நமது உடலுக்கு எத்தகைய நன்மைகள் ஏற்படுவதை பாருங்கள்.

தண்ணீர் அதிகமாக குடித்தால் முகப் பருக்கள் நீங்கும்; முகம் பள பளக்க செய்யும். தண்ணீர் குடிக்கும் போது குடிக்கும் பாத்திரத்தில் மூச்சு விடக்கூடாது. ஏனெனில் நாம் மூச்சு விடும்போது வெளியாகும் கிருமிகள் அந்த தண்ணீரில் சேர்ந்து விடுகிறது. அதனை குடிக்கும்போது நோய் ஏற்படுகிறது. தினமும் காலையில் வெறு வயிற்றுடன் தண்ணீர் குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

தண்ணீர் அவசியம் கடந்த சில ஆண்டுகளாக, வெள்ளக்காடாகச் சூழ்ந்து விடுகின்ற மழைத் தண்ணீர் சலிப்பை உண்டாக்கியிருந்தாலும், உடல் ஆரோக்கியத்திற்குத் தண்ணீர் அன்றாடம் இரண்டு லிட்டர் குடிக்க வேண்டும் என்பது அவசியம். அதைப் பருகும் விதம் எப்படி என்பது இதோ இங்கே கூறப்படுவது சரிதானோ என்று யோசிக்க வைக்கின்றது. டம்ளர் கணக்கில் தண்ணீர் குடியுங்கள் என்று கூறப்படுகிறது.

எப்படிக் குடிக்க வேண்டும் ?

தண்ணீர் குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு தண்ணீரை குடிக்கும் போது தண்ணீர் வயிற்றிற்கு அதிவேகமாக செல்லும். அதனால் ஹெர்னியா ஏற்படும் தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். 

அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது உண்ட உணவு ஜீரணிக்கும். டம்ளரில் வாய் வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும். தண்ணீரைத் தலை அண்ணாந்திச் சாப்பிடுவது காது நோய்களுக்கு வழி வகுக்கும். தண்ணீரை அண்ணாத்திக் குடித்தததால் ஏற்பட்ட பாதிப்பால் சிலருக்கு விரைந்து காது நோய்கள் தோன்றுகின்றன. நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. 

ஒரு போதும் தண்ணீரை அண்ணாத்திக் குடிக்க வேண்டாம். ஒருவர் குடித்த டம்ளரில் மற்றொருவர் குடிப்பது சுகாதாரக் கேடு என நீங்கள் கூறலாம். இதற்கும் மாற்று வழி உண்டு. ஒவ்வொருவருக்கும் டூத் பிரஷ் இருப்பது போல தனித்தனியே டம்ளர் வைத்துக் கொள்ள வேண்டும். விருந்தினர்க்கு கொடுக்கப்பட்ட டம்ளரை உடனுக்குடன் அலசிக் கழுவி வைத்துக் கொள்ளலாமே!



தகவல் : RAVI  SR RAVI 

PROP : SR OIL MILL  
PATTUKKOTTAI 



No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval