புதுடெல்லி: வக்ஃப் சொத்துகளை பாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்குமான வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தாக்கல் செய்த மசோதாவை பா.ஜ.க., இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர். முன்னர் இம்மசோதாவை மாநிலங்களை அங்கீகரித்திருந்தது. குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டால் இம்மசோதா அமலுக்கு வரும்.
வக்ஃப் சொத்துகளை விற்பது, தானமாக அளிப்பது, அடகு வைப்பது ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் சொத்துகளை அபகரித்தல் ஜாமீன் இல்லாத குற்றமாகும். ஆனால், வக்ஃப் சொத்துகளை 30 ஆண்டுகளுக்கு கல்வி தேவைகளுக்காகவும், 15 ஆண்டுகள் வர்த்தகத்திற்காகவும் குத்தகைக்கு வழங்கலாம்.
புதிதாக உருவாக்கப்படவிருக்கும் வக்ஃப் வளர்ச்சி கார்ப்பரேஷன் மூலம் வக்ஃப் சொத்துகள் குத்தகைக்கு விடப்படும். ஒவ்வொரு பத்து ஆண்டுகள் கழியும்போதும் வக்ஃப் சொத்துகள் மீது சர்வே நடத்தப்படும்.
துபையிலிருந்து: அதிரை ஷா.நவாஸ்
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval