2020ம் ஆண்டுக்கான உலக வர்த்தக எக்ஸ்போ கண்காட்சி நடத்துவதற்கு துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அமீரகத்தில் வசிக்கும் மக்கள் இந்த முடிவை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அமீரக வாழ் அதிரையர் பலர் மகிழ்ச்சிகளை சக நண்பர்களுடன் பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.
இதில் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் பொருளாளர் N. முஹம்மது தாஹா, அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் செயலாளார் N.K.M. நூர் முஹம்மது ஆகியோர் சேக் கலிஃபா [ In charge of Ministry of Environment &Water Department ] அவர்களை சந்தித்து தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர். மேலும் எதிர் வரும் டிசம்பர் 2 அன்று கொண்டாடப்பட உள்ள அமீரக தேசிய தினத்திற்கும் தங்களின் வாழ்த்துகளை முன்னதாக தெரிவித்துக்கொண்டனர்.
பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தப் போட்டியிட்டிருந்தன. இந்தப் போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரிஸில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் துபாயில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் இரு பக்கங்களிலிருந்தும் வெடிகள் வெடிக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சி ஒரு மத்திய கிழக்கு பகுதி மாநகரில் நடப்பது இதுவே முதன்முறை.
இந்த கண்காட்சியை உலகமே பிரமிக்கும் வகையில் நடத்தப்போவதாக துபாயின் மன்னர் ஷேக் அல் மக்தூம் உறுதியளித்திருக்கிறார்.
இதை நடத்த புதிய இடம் ஒன்றுக்காக சுமார் ஒன்பது பிலியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்.
2015ம் ஆண்டுக்கான எக்ஸ்போ இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடக்கவிருக்கிறது.
நன்றி; அதிரை நியூஸ்
செய்தியும், புகைப்படமும்
N.K.M. நூர் முஹம்மது [ நூவண்ணா ]
இதில் நெசவுத்தெரு அமீரக அமைப்பின் பொருளாளர் N. முஹம்மது தாஹா, அமீரக தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின் செயலாளார் N.K.M. நூர் முஹம்மது ஆகியோர் சேக் கலிஃபா [ In charge of Ministry of Environment &
பிரேசில், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்த எக்ஸ்போ கண்காட்சியை நடத்தப் போட்டியிட்டிருந்தன. இந்தப் போட்டியில் துபாய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பாரிஸில் இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் துபாயில் இருக்கும் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் இரு பக்கங்களிலிருந்தும் வெடிகள் வெடிக்கப்பட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த எக்ஸ்போ கண்காட்சி ஒரு மத்திய கிழக்கு பகுதி மாநகரில் நடப்பது இதுவே முதன்முறை.
இந்த கண்காட்சியை உலகமே பிரமிக்கும் வகையில் நடத்தப்போவதாக துபாயின் மன்னர் ஷேக் அல் மக்தூம் உறுதியளித்திருக்கிறார்.
இதை நடத்த புதிய இடம் ஒன்றுக்காக சுமார் ஒன்பது பிலியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும்.
2015ம் ஆண்டுக்கான எக்ஸ்போ இத்தாலியில் உள்ள மிலான் நகரில் நடக்கவிருக்கிறது.
நன்றி; அதிரை நியூஸ்
செய்தியும், புகைப்படமும்
N.K.M. நூர் முஹம்மது [ நூவண்ணா ]
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval