Wednesday, November 20, 2013

நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் கட்சி வேறுபாடின்றி எம்பிக்கள் எதிர்ப்பு!

குஜராத் கலவரத்துக்கு பின்னர் நரேந்திர மோடிக்கு விசா வழங்குவதை 2005ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. 
நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடைவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்கா நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்பிக்கள் கொண்டு வந்தனர். 
மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்த தீர்மானம், அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நீதிகோரி வருவதை குறிப்பிட்டுள்ளது.
 
ஆளும் ஜனநாயகக் கட்சி எம்பி கீத் எலிசன் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை, குடியரசு கட்சி எம்பி ஜோகித் உள்ளிட்ட எம்பிக்கள் வரவேற்றுள்ளனர். இந்த தீர்மானம் வெளியுறவுத்துறை அமைச்சக நாடாளுமன்ற துணைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
courtesy:  Nakkeeran 
தகவல் ;ஷவ்கத் அலி 
BOSTON U.S.A

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval