மதரஸா எனப்படும் முஸ்லிம் மதப் பள்ளிகள் மற்றும் மக்தப் எனப்படும் முஸ்லிம் தொடக்கப் பள்ளிகள் ஆகியவற்றின் கல்வி முறையில் சில நல்ல மாற்றங்களை செய்வதற்கான மாநாடு அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெறவுள்ளது. Assam Islamic Conference என்ற பெயரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் தருண் கோகாய் துவக்கிவைக்க உள்ளார். இம்மாநாட்டின் நோக்கம் “மீட்புக்கான அறிவு” (Knowledge for deliverance) என்பதாகும். அதை அடைவதற்கான முடிவுகளை எட்டுவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுவதாக, தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கூறிய இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பாரம்பரிய முறையிலான மதக் கல்வியோடு, தொழில்நுட்பக் கல்வியையும் சேர்த்து வழங்குதல் உள்ளிட்ட அம்சங்களோடு, அக்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படவுள்ளன என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks to;http://indru.todayindia.info
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval