Tuesday, October 29, 2013

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பசலைக்கீரை

பசலைக்கீரை... இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும் நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் 
இதனால் குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள். 

முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த் தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம். 

இங்கு அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் கொடுத்துள் ளோம். அதைப் படித்தால், நிச்சயம் இந்த கீரையை உணவில் சேர்க்காமல் இருக்க மாட் டீர்கள். குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். 

அதிக வைட்டமின்கள்: பசலைக்கீரையில் வைட்ட மின் `ஏ', `கே' மற்றும் `ஈ' அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த் தொற்றுகளான சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம். 

மலச்சிக்கலில் இருந்து விடுதலை: தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப் பதால், செரிமான மண்ட லம் சீராக செயல்படும். 

ரத்த அழுத்தம் குறையும்: பசலைக்கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந் துள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உயர் ரத்த அழுத்தத்தினால் உண்டாகும் மோசமான நிலையில் இருந்து பாதுகாக்கும். 

புற்றுநோயை எதிர்க்கும்: பசலைக் கீரையில் ஃப்ளே வோனாய்டு என்னும் அத்தி யாவசிய பைட்டோ நிïட்ரி யண்ட்டுகள் இருக்கிறது. மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அதிகம் உள்ளது. அதிலும் இந்த பசலைக்கீரை புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. 

சீரான ரத்த அழுத்தம்: இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். 

ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக் கியமாக வைத்துக் கொள்ள முடியும். 

கொழுப்பை கரைக்கும்: பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண் டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம். 

சரும பாதுகாப்பு: பசலைக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் கனி மச்சத்துக்கள், சருமத்தில் எண்ணெய் பசையைத் தக்க வைத்து, சரும வறட்சியில் இருந்து நிவாரணம் தரும். அதுமட்டுமின்றி, இது சரும பிரச்சனைகளான முகப்பரு மற்றும் சுருக்கங்களில் இருந்தும் விடுதலை அளிக்கிறது. 

கண்ணுக்கு பாதுகாப்பு: பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும். 

மூளை, நரம்பு மண்டலம்: பசலைக்கீரையில் நல்ல அளவில் செலினியம், நியாசின் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இவை மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சத்துக்களாகும். 

எலும்புகளின் அடர்த்தி: ஒரு கப் வேக வைத்த பசலைக்கீரையில் வைட்டமின் `கே' வளமான அளவில் உள்ளது. மேலும் இதில் எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை அதிகரிக்கும் வகையில், எலும்புகளில் ஆஸ்டியே கால்சின் என்னும் புரோட்டினை அதிகரிக்கிறது. 

மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலி யைக்குணப்படுத்தும். 

ரத்த சோகை: பசலைக்கீரையில் இரும்புச் சத்து வளமாக இருப்பதால், இதனை தினமும் உட்கொண் டால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரித்து, ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். பாஸ்ட் புட், ஹைபிரிட் காய் கறிகள், எந்திரத்தனமான வாழ்க்கை முறை, ஓய்வற்ற உழைப்பு..., 
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பசலைக்கீரை

இவை அனைத்தும் நம்மை மருந்து, மாத்திரைகள் என்ற உலகத்திற்கு அழைத்து செல்கிறது. நொறுங்க தின்றால் நூறு வயது என்பது பழமொழி. ஆனால் இன்று அனைத்தையும் நாம் ரெடிமேட் என்ற உலகத்திற்குள் கொண்டு வந்துவிட்டோம். 

எனவே நமது வாழ்வை சற்று இறைவன் அளித்த இயற்கையோடு இணைந்து கடப்போம். அதில் ஒன்றுதான் கீரை வகைகள். அந்த வகையில் இந்த பசலைக்கீரைக்கு என்றுமே முதலிடம்தான். 

பசலைக்கீரை நம் எதிர்கால சந்ததியினருக்கும் காண்பித்து அவர்களுக்கும் இந்த கீரையின் பலாபலன்களை எடுத்துக்கூறி ஆரோக்கியமான இதயம், ஆரோக்கியமான எலும்பு, ஆரோக்கியமான சருமம், ஆரோக்கியமான கண்கள் என்று ஆரோக்கிய வாழ்வு வாழச்செய்யுங்கள்.கொடுப்பது மிகவும் இன்றியமையாதது. 
Thaks to Malaimalar

இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்?



இரத்த ஓட்டம்உணவு உட்கொள்ளப்பட்டவுடன், அது இரைப்பைக்கு (Stomach) சென்று பின்னர் குடல்களுக்குச் செல்கிறது. இவற்றில் நாம் உட்கொண்ட உணவுகளின் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு, சக்கைகள் வேறாகவும், சத்துப்பொருட்கள் வேறாகவும் பிரிக்கப்படுகின்றது. இந்த சத்துப்பொருட்கள் குடல்களிலுள்ள இரத்த நாளங்களின் (Blood Vessels of Intestine) வழியாக இரத்த ஓட்டத்தைச் (Blood Circulation)சென்றடைகிறது.
இந்த இரத்த ஓட்டம் நாம் உண்ட உணவின் சத்துப் பொருட்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கும் எடுத்துச் சென்று அந்த உறுப்புகள் சீராக இயங்குவதற்கு உதவுகிறது உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம். * மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி? மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன? எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன? நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான். இவ்வாறு இரத்த ஓட்டத்தின் மூலம் நம்முடைய உட ற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வண்ணம் படைத்த ரப்புல் ஆலமீன் அழகிய முறையில் படைத்துள்ளான்.
இப்படிப்பட்ட இந்த இரத்த ஓட்டம் மனிதனின் உடலில் உள்ளது என்பதை முதன் முதல் கண்டுபிடித்தவர் யார் ? உயிரினங்களின் இரத்த ஓட்டம் பற்றிய அறிவியலை இப்னு நஃபீஸ்என்பவரே முதன்முதலாக கண்டறிந்து கூறினார்.
இது நடந்தது குர்ஆன் இறக்கியருளப்பட்ட 600 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆகும். இவருக்கு 400 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வில்லியம் ஹார்வி என்பவர் இரத்த ஓட்டம் பற்றிய இந்த அறிவியலை மேலை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துக்கூறி இதை பிரபல்யப்படுத்தினார். வில் யம் ஹார்வி என்ற அறிவியலாளர் பிறந்த ஆண்டு கி.பி. 1578 ஆகும்.
ஆனால் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடல் இரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்ற உண்மைத் தகவலை அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த மனித சமுதாயத்திற்கு எடுத்துரைத்து விட்டார்கள். எப்படித் தெரியுமா?
இதோ இறைத்தூதர் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهُ ح حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ وَعِنْدَهُ أَزْوَاجُهُ فَرُحْنَ فَقَالَ لِصَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ لَا تَعْجَلِي حَتَّى أَنْصَرِفَ مَعَكِ وَكَانَ بَيْتُهَا فِي دَارِ أُسَامَةَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا فَلَقِيَهُ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَنَظَرَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَجَازَا وَقَالَ لَهُمَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَالَيَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يُلْقِيَ فِي أَنْفُسِكُمَا شَيْئًا رواه البخاري 2038
ஸஃபிய்யா (ர லி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாச லில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ”அவசரப்படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!” என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ”இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!” எனக் கூறினார்கள். அவ்விருவரும் ”சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடும் இடங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கின்றாரன் உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள். நூல் : புகாரி (2038)
அல்லாஹ்வின் தூதர் படைத்த இறைவனிடம் இருந்து பெற்று அறிவித்த அற்புதத் தகவலைத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வந்த வில்லியம் ஹார்வி என்ற அறிஞர் கண்டறிந்தார். வில்லியம் ஹார்வியின் ஆய்விற்கு துணைபுரிந்தது இப்னு நஃபிஸ் என்று முஸ்லிம் அறிஞரின் ஆய்வே ஆகும். முஸ்லிம் அறிஞரின் ஆய்விற்கு அடித்தளமாக அமைந்தது அல்லாஹ்வின் தூதரின் இறையறிவிப்பே என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ(6)34
(முஹம்மதே!) ”உமது இறைவனிட மிருந்து உமக்கு அருளப்பட்டதே உண்மை” என்று கல்வி வழங்கப்பட்டோர் கருதுகின்றனர். மற்றும் புகழுக்குரிய மிகைத்தவனின் வழியை அது காட்டுகிறது.
(அல்குர்ஆன் 34 : 6)
Thankyou -கே.எம் அப்ந்நாசிர் எம்.ஐ.எஸ்.சி
தகவல் N.K.M .புரோஜ்கான் 

   

Sunday, October 27, 2013

மரண அறிவிப்பு


சேது ரோட்டை சேர்ந்த  மர்ஹூம்  அப்துல் கரீம் அவர்களின் மகனும், ஜபருல்லாகான், அயூப்கான், அஜ்மல்கான், நெய்னாகான் ஆகியோரின் சகோதரரும்  அரஃபாத் அவர்களின் தகப்பனாருமான அஷ்ரப் அலி அவர்கள் இன்று (27-10-2013) காலை 9 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.இவர் சாரா,லாவண்யா  கல்யாண மண்டபம் உரிமையாளர் மர்ஹூம் பாருக் மரைக்காயர் அவர்களின் மைத்துனர் என்பது குறிப்பிடதக்கது. 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 4 மணியளவில் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நடைபெறும்.

நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்
 

Friday, October 25, 2013

அரிய தகவல்கள்



Today at 8:55 PM
 :
1) முதன்முதலில் உருவாக்கப்பட்ட கேமிராவில்
போட்டோ எடுக்க எட்டுமணிநேரம்
உட்கார்ந்தே இருக்கணுமாம்!!
2) வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம்
சாப்பிட்டால் கண்ணீர் வராது.
3) மூளையிலிருந்து மற்ற இடங்களுக்கும் மற்ற
இடங்களிலிருந்துமூளைக்கும் செல்லும்
கட்டளைகள் சுமார் 274கி.மீ வேகத்தில்
அனுப்படுகின்றன!.
4) ட்விட்டர் லோகோவில் இருக்கும் பறவையின்
பெயர் லேரி!!
டிவிட்டரின் டிபால்ட் புரொபைல் பிக்ச்சராக
முட்டை இருக்கக் காரணம் நாமெல்லாம் ட்விட்டர்
பறவையின் குஞ்சுகளாம்! நம்ம ஹோம் பேஜ்
ஒரு குருவிக்கூடு!
5) உங்களுடைய உதட்டின் நீளமும்
ஆள்காட்டி விரலின் நீளமும் கிட்டத்தட்ட
ஒரே அளவுதான்! அளந்து பாருங்க
சரியா இருந்தா லைக் பண்ணுங்க

Wednesday, October 23, 2013

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
புதுமனைத்தெருவைச் சேர்ந்த         செய்யது   முகம்மது  புஹாரி ,     இபுராஹிம்.  உதுமான் அலியார்,  அஸ்ரப், நெய்னா   இவர்களின் தகப்பனாரும்      , H நெய்னா முகம்மது           அவர்களின்          மாமனாருமான   ஹாஜி  கா .ப.மு. . முகம்மது கமால்  அவர்கள்  C.M.P. லேன் இல்லத்தில்   இன்று[ 23-10-2013 ]  காலமாஹிவிட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னாயிலைஹி ராஜ்வூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பின் மரைக்காப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
  

இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக..! இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக..! இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக..!
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக...! பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக..!
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக..! கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. ஆமின் 

தகவல்,செய்யது முஹம்மது புகாரி 
NEW YORK U.S.A

Monday, October 21, 2013

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] சந்திப்பு

கலிபோர்னியாவில் வாழும்( அமெரிக்கா   அதிரையர் கூட்டமைப்பின்  AAF ) முதல் வருட நிறைவு மற்றும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நேற்று [ 21-10-2013 ]அன்று வலெஹோ  நகரில் உள்ள இஸ்லாமிய மையத்தில் சிறப்பாக துவங்கியது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக  சகோ.  ஜாபிர், சகோ. மாகிர் மற்றும் சகோ.ஹாதிம் ஆகியோரின் கிராத்துடன் நிகழ்ச்சி  ஆராம்பமனது.

இந்த கூட்டத்தின் தொடக்க  உரையை AAF செயலாளர் சகோ. நஜிர் அவர்களும், ஆண்டறிக்கையை தலைவர் சகோ. ஹக்கீம் அவர்களும், பொருளாளர் சகோ. இக்பால் M. ஸாலிஹ் அவர்கள் கணக்கு விவரங்களையும் சமர்பித்தனர். இறுதியாக நன்றியுரையை  துணைத்தலைவர் சகோ. ஸிப்லி அவர்கள் நிகழ்த்தினார்.

முன்னதாக இந்தக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டன. இறுதியில் தற்பொழுது பணியாற்றி கொண்டிருக்கும் கீழ்க்கண்ட  நிர்வாகிகளே தொடர்ந்து  நிர்வாகிகளாக  தொடர்வார்கள் என  அனைவராலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டதையடுத்து கீழ்க்கண்ட நிர்வாகிகள் உறுதி செய்யப்பட்டனர்.
தலைவர் : சகோ. ஹக்கீம்
துணைத்தலைவர் : சகோ.ஷிப்லி
செயலாளர் : சகோ. நஜிர்
பொருளாளர் : சகோ. இக்பால் M. ஸாலிஹ்
துணைச்செயலாளர் : சகோ. தமீம் அன்சாரி

பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களின் குடும்பத்தினருடன் வருகை தந்து நிகழ்ச்சியை  சிறப்பித்தனர் வந்திருந்த அனைவருக்கும்  பகல்  உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது 

தகவல் N.M.S.முகமது ரபீக் 
கலிபோர்னியா  U.S.A.


சினிமாவை நோக்கி இஸ்லாம்!


 
           "இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்களே இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிலர் தவறாக விளக்கம் சொல்லியே விலக்கி வைத்துவிட்டார்கள். படங்களை வீட்டில் வைத்து வணங்குவதுதான் தவறு. ஆனால், படமே வீட்டில் இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி விளக்கம் சொல்கிறவர்கள்தான் ரூபாய் நோட்டை பாக்கெட்டி லேயே வைத்திருக்கிறார்கள். அதில் காந்தி படம் இருக்கிறதே.. எனவே இப்படி தவறான விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் காணாமலேயே போய்விடுவோம். சினிமா என்பது ஹராம் (தீமை) அல்ல. இதுபோன்ற ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்துதான் ஹராம்' -கவிக்கோ அப்துல்ரகுமான் இந்த மெசேஜை சொன்ன இடம், "தி மெசேஜ்' என்ற திரைப்படம் தமிழில் திரை யிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட்ட சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில்.

பாலைவனச் சிங்கம் எனப்படும் "ஒமர் முக்தார்' படத்தைத் தந்த இயக்குநர் முஸ்தபா  அக்கட், 1976-ல் எடுத்த மற்றொரு மகத்தான படைப்பு "தி மெசேஜ்'. முகமதுநபியின் வாழ்வையும் இஸ்லாத்தின் வரலாற்றையும் விளக்கும் திரைக்காவியம். 35ஆண்டுகள் கடந்தும் சிறந்த படைப்பாக உயர்ந்து நிற்கிறது. 

நபியின் உருவத்தைக் காட்டாமலேயே மற்ற கதாபாத்திரங்கள் மூலமாகவும் பிரம்மாண்டமான பட உருவாக்கத்தின் மூலமாகவும் வரலாற்றைச் சொன்ன இப்படம் இப்போது மாஸ் கம்யூனிகேஷனால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ம.ம.க.  எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,  அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், எல்.கே.எஸ் ஜூவல்லர்ஸ் இம்தியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் அக்டோபர் 12-ந் தேதி வெளி யிடப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “""சினிமா என்பது உருவாகி நூறாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் (தமிழக இஸ்லாமி யர்கள்) இப்போதுதான் இதற்குள் வந்திருக்கிறீர் கள். இதனை சரியான முறையில் கையிலெடுங்கள். நீங்கள் உள்ளே வராமல் சினிமாவை எதிர்ப்பதால்தான் வாமனப் படங்களெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது'' என்றார். 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும் போது,

""இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, நாங்கள் உள்பட எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது. பெண் சிசுக்கொலை தடுப்பு, பெண்களின் உரிமைகள், கைதிகளின் உரிமை, ஒடுக்கப்பட்டோர் நலன் இவை பற்றியெல்லாம் முகமது நபி  சொல்லியிருப்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளைக் கொண்ட படங்களை தமிழில் எடுக்க முன்வரவேண்டும்'' என்றார்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மதவாத அரசியல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அன்பையும் சகோ தரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கத் தையும், பிற மதத்தினருடன் இணைந்து  வாழும் இங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையையும் விளக்குவதற்கு சினிமா என்ற ஆயுதம் தேவை என்ற கருத்து படவெளியீட்டு விழாவில் பரவலாக வெளிப்பட்டது.  திரைத்துறை நோக்கி தமிழக இஸ்லாமியர்களின் பார்வை திரும்புகிற தருணம் இதுவோ!
courtesy:   Nakkeeran
தகவல் சவ்கத் அலி 
BOSTON U.S.A.

Sunday, October 20, 2013

புகழனைத்தும் இறைவனுக்கே

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்
மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்.....!!

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும் கோபத்திர்கும் உள்ளானவர்.

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

அவர் மக்கா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்...
Photo: எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! 

நபிகள் நாயகத்தை வசைபாடி படம் எடுத்தவர்
மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார்.....!!

இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்களில் குறிப்பிட தக்கவர் ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் என்பவர் இவர் சினிமா பட தயாரிப்பாளர் ஆவார் இவர் நபிகள் நாயகத்தை வசை பாடும் விதமாக திரைபடம் தயாரித்து வெளியிட்டு அதனால் முஸ்லிம்களின் எதிர்ப்பிர்கும் கோபத்திர்கும் உள்ளானவர்.

முஸ்லிம்களின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்ட பிறகு அவர் சிந்திக்க தொடங்கினார் முஹம்மது நபியை பார்க்காத நிலையிலும் அவர் இறைவனடி சேர்ந்து 1400 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவரின் மீது அளவற்ற அன்போடு இன்னமும் முஸ்லிம் சமுதாயம் உள்ளதே அது ஏன்? என்ற கேள்விக்கு விடை தேடி நபிகள் நாயகத்தை பற்றி படிக்க தொடங்கினார் படித்து முடித்த பிறகு அவர் செய்த தவறை உணர்ந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார் 

அவர் மக்கா நகரில் பத்திரிகையாளர் சந்திப்பில் பின் வருமாறு கூறினார்...

இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன், அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்.

இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மூலம் மறு அறிமுகம் செய்யப்பட்ட புனித இஸ்லாத்தின்  மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது

இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்!

Thanks to Mr. Syedali Faizi

இந்த மண்ணில் கால் பதித்ததிலிருந்து நான் அழுது கொண்டே இருக்கிறேன், அழுது புலம்பி எனது இறைவனிடம் நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோருகிறேன் நபிகள் நாயகத்தை வசை பாடி திரைபடம் எடுத்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரியே நான் இங்கு வந்துள்ளேன்.
இப்படி கூறிய அவர் எந்த நபியை வசை பாடி படம் எடுத்தாரோ அந்த நபியின் மூலம் மறு அறிமுகம் செய்யப்பட்ட புனித இஸ்லாத்தின் மஸ்ஜிதுன் ஹரம் ஷரீஃபில் அமர்ந்து தனது தவறை நினைத்து வருந்தி தேம்பி தேம்பி அழுததாக அல் உகாள் பத்திரைகையின் செய்தி கூறுகிறது

இந்த மார்கத்தை எதிர்ப்பவர்கள் சிந்திக்க தொடங்கும் போது இந்த மார்க்கம் தான் அவர்களுக்கு புகலிடமாக மாறுகிறது என்பதர்கு மற்றோரு எடுத்து காட்டாக ஹோலன்ட் நாட்டை சார்ந்த அர்னோல்ட் திகழ்கிறார்
!Thanks to Mr. Syedali Faizi  &
சங்கை ரிதுவான்(பக்கம் ) 


அல்லாஹ்வின் மகிமை

இந்தோனோசியாவில் சுனாமியில் அனைத்தும் அழிந்த பின்னும் கம்பீரமாக
நிற்கும் பள்ளிவாசல் சுப்ஹானல்லாஹ் 

Photo: Indonesian Mosque Stand after Earthquake (tsunami) How many like for this miracle or Allah.. Subhan'Allah
:Timeline Photos

என்னைக் கவர்ந்த இஸ்லாம்


மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். "ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார். மிகக் கடுமையான ஆச்சரியத்தில் நான் சிரித்தேன்.

"என் முகத்தைப் பார்க்காத ஓர் ஆடவர் உண்டா?' என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

அவ்விருவரின் கோரிக்கையை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. அதனால் அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்தேன்; இணங்கினேன்.

குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற அவருக்கு ஆறுதல் அளிப்பதற்கு, அமைதியளிப்பதற்கு இரண்டாம் நாள் அவரிடம் வந்தேன்.

"பிரசவத்திற்குப் பின்னால் பெண்களுக்கு நாற்பது நாட்கள் அளவுக்கு இரத்தப்போக்கு இருக்கும். அமெரிக்க தம்பதியர்கள் இக்கால கட்டத்தில் காக்க வேண்டிய தடை, தடுப்புகளைத் தகர்த்தெறிந்து விட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் பல்வேறு நோய்களுக்கு இலக்காகி விடுகின்றனர்.

எனவே குறைந்தபட்சம் 40 நாட்களுக்கு தம்பதியர் பத்தியம் காக்க வேண்டும். உடலுறவுக்கு விடை கொடுத்து விடவேண்டும். இந்த 40 நாட்களுக்கு இடையே பாதுகாப்பான உணவு சாப்பிட வேண்டும். பாரமான, பளுவான பணிகள் எதையும் செய்யாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் நிரூபிக்கப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில் தான் இதைத் தெரிவிக்கிறேன்'' என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்தேன்.

அந்த அரபியப் பெண் ஆசுவாசமாக, அமைதியாக, எவ்வித பரபரப்புமின்றி, "பிரசவமான பெண்ணின் இரத்தம் நிற்கின்ற வரையில் தாம்பத்தியத்திற்கு இஸ்லாம் தடை விதித்திருக்கின்றது'' என்று தெரிவித்தார்.

"அத்துடன் மட்டுமல்லாமல் இக்கால கட்டத்தில் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களையும் இத்தகைய பெண்களுக்கு இஸ்லாம் ரத்து செய்துவிடுகின்றது'' என்று அவர் தெரிவித்தது தான் தாமதம்! அவரது இந்த யதார்த்தமான பதில் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.





நீண்ட, நெடிய ஆய்வுக்கூட அறிஞர்களின் ஆய்வை இஸ்லாம் தன் வாழ்க்கை நெறியில் சர்வ சாதாரணமாக இழையோடச் செய்திருக்கின்றது என்று எண்ணி பிரமித்துப் போய்விட்டேன்.

இந்த நேரத்தில் குழந்தைகள் நல பெண் மருத்துவர் வருகை தந்தார். குழந்தை நலன் தொடர்பான மருத்துவ அறிவுரைகளை மணிக்கணக்காக விவரிக்க ஆரம்பித்தார்.

"குழந்தைகளை அதன் வலது பக்கமாக உறங்க வைக்க வேண்டும். இதன் மூலம் அதனுடைய இதயத் துடிப்புகள் சீராக அடிக்கின்றன, அமைகின்றன'' என்று சொன்னதும் குழந்தையின் தகப்பனார், "நல்ல காரியங்கள் அனைத்திலும் வலது பக்கம் தான் என்று நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி வலது பக்கமாகவே நாங்கள் உறங்க வைக்கின்றோம்'' என்று சொன்னதும் மீண்டும் என்னுடைய உடலில் நாடி நரம்புகளில் அதிகமான அதிர்வலைகளைப் பாய்ச்சியது.

அவ்வளவு தான். மருத்துவமனைக்கு ஒரு மாதம் விடுப்பு போட்டேன். அருகில் உள்ள நகரத்தில் அமைந்திருக்கும் ஓர் இஸ்லாமிய மையத்திற்குச் சென்று விடை தேடினேன். ஏற்கனவே இருந்த மார்க்கத்திலிருந்து விடுதலையானேன். என்னை நான் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டேன்.

நன்றி: அல்ஆலமுல் இஸ்லாம், அரபி வார இதழ்
தகவல் , AR Abdul Latheef

மரண அறிவிப்பு

 





மேலத்தெரு கா. நெ. குடும்பத்தை சார்ந்த மர்ஹூம் அப்பாஸ் மரைக்காயர் அவர்களின் மகனும், கா.நெ., மர்ஹூம் ஜாகிர் ஹுசைன், சாகுல் ஹமீது, ஹாஜா அலாவுதீன், முஹம்மது யூசுப், யாசர் அரபாத் ஆகியோரின் தகப்பனாரும், K.S. ஜமால் முஹம்மது, M.A.C. அப்துல் ஸலாம் ஆகியோரின் மாமனாருமாகிய கா. நெ. கமால் பாட்சா அவர்கள் இன்று [ 20-10-2013 ]  வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் பெரிய ஜூம்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் கொடுப்பானாக.அன்னாரின் மறு உலக நற் பேறுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோமாக.ஆமீன்.

தகவல்;A.fazee jabbar 

Friday, October 18, 2013

வாழைத்தண்டு மகத்துவம்




நார்ச்சத்து, பொட்டாசியம் நிரம்பியது.
வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு, உப்புசம் நீக்கும்.
சிறுநீரகக்கல் உள்ளவர்களுக்கும் நல்ல பலன் தரும்.
வெப்பம் குறைக்கும்... நீர்க்கடுப்பு நீக்கும்.
தொடர்ந்து உணவில் சேர்க்கையில் பருமன் குறையும்... ஊளைச்சதை மறையும்.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் குறைக்கும்.
நீரிழிவுகாரர்களுக்கும் பயனுள்ளது...

வாழைத்தண்டினை சுற்றியிருக்கும் கடுமையான பாகத்தை எடுத்துவிட்டு, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும். நூல் நூலாக வரும் நாரை எடுத்துவிட்டு வட்டமாக நறுக்கியதை பொடியாக வெட்டி சமையலுக்கு உபயோகிக்கும் வரை, சிறிது தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் வெண்மை மாறி கருக்காமல் இருக்கும். அதை நறுக்கி, நாரெடுத்து, சுத்தம் செய்தால் 8 சுவை உணவுகளைச் சட்டென செய்யலாம்.

வாழைத்தண்டு சாலட்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, சிறிது உப்பு சேர்த்து சாலட்டாக பரிமாறலாம்.


வாழைத்தண்டு பொரியல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு - 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - சிறியது 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, எண்ணெய் - தேவையான அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக வெட்டி வைத்த வாழைத்தண்டை வேக வைக்கவும். பாசிப்பருப்பினை நனைய வைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பு பூப்பூவாக இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் வதங்கியதும், வேகவைத்த வாழைத்தண்டினையும் சேர்த்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி இலை தூவிப் பரிமாறவும்.

வாழைத்தண்டு சூப்

பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி அளவு வாழைத்தண்டினை வேக வைக்கவும். அத்துடன் இரண்டு சின்ன வெங்காயம் (வட்ட வட்டமாக வெட்டியது), ஒரு பச்சை மிளகாய் (வட்டமாக பொடியாக நறுக்கியது) சேர்த்து வெந்ததும், ஒரு டீஸ்பூன் மைதா சேர்க்கவும். இரண்டு கொத்தமல்லி இலை கிள்ளிப் போட்டு, சிறிது மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும்.
* பொரியல், உசிலிக்கு வேக வைக்கும்போது அந்த நீரையும் எடுத்து மேற்குறிப்பிட்டவை சேர்த்தும் சூப் செய்யலாம்.

வாழைத்தண்டு துவையல்

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கைப்பிடி, பாசிப்பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், வெள்ளைப்பூண்டு - 1, பச்சை மிளகாய் - 2, மிளகாய் வற்றல் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி, புளி - சிறிது, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பு, சீரகம், வெள்ளைப்பூண்டினை சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதங்கும்போது, நறுக்கிய வாழைத்தண்டினை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். ஆறியதும் மிக்சியில் அரைத்துப் பரிமாறவும். காரம் தேவையான அளவு அதிகமாகவோ குறைவாகவோ உபயோகிக்கலாம்.

வாழைத்தண்டு உசிலி

என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு, கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் - தேவையான அளவு, தாளிக்க எண்ணெய் - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டை வேக வைத்துக்கொள்ளவும். கடலைப் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். ஊறிய கடலைப் பருப்பினை மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து அரைக்கவும். மிகவும் கரகரப்பாகவோ, மிகவும் நைஸாகவோ இல்லாமல் அளவாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இட்டு தாளித்ததும் அரைத்து வைத்திருக்கும் கடலைப் பருப்பினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தேவையானால் இன்னும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக வதங்கியதும், வேக வைத்து எடுத்த வாழைத்தண்டினைச் சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

வாழைத்தண்டு ரைஸ்

வாழைத்தண்டு உசிலியைக் கொஞ்சம் அதிகமாகச் செய்து எடுத்துக்கொண்டு, அதே வாணலியில் சாதத்தைச் சேர்த்து லேசாக புரட்டி எடுக்க வாழைத்தண்டு ரைஸ் ரெடி. உசிலியில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதற்கு முன், சிறிது குடைமிளகாய் சேர்த்து சாதத்தில் கலந்தால் வாழைத்தண்டு புலாவ் தயார்.

* நெய்யில் வறுத்தெடுத்த முந்திரியை நெய்யோடு சேர்த்து சாதத்தில் சேர்த்தால் மணமாக இருக்கும்.

வாழைத்தண்டு ஸ்பெஷல் மோர்

வாழைத்தண்டை சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டவும். ஜில் செய்த மீதி மோரில் வாழைத்தண்டுச் சாற்றை கலந்து, இஞ்சிச்சாறு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து பருகவும்.
 — 

Thursday, October 17, 2013

பாகற்காய்


கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்... 

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். 

சத்துப்பட்டியல்: பாகற்காய்

 குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. 

* 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான். 

* உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய். 

* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும். 

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும். 

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும். 

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும். 

* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது. 

* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
நன்றி;மாலைமலர் 

Wednesday, October 16, 2013

அமெரிக்கா கலிபோர்னியா அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு



                                      

                                       

                                      

       



தகவல் ;அதிரைவாசி 

Tuesday, October 15, 2013

கனடா டொரோண்டோ நகரில் ஹஜ் பெருநாள் தொழுகை

கனடா  டொரோண்டோ நகரில் நடந்த   ஹஜ் பெருநாள் தொழுகையின் போது
ஒன்று  கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறும் காட்சிகள்


  



புகைப்படம் மற்றும் தகவல் A.அஹமது ஃபாஸி ஜப்பார் 

நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ந் தேதி அமல்: ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு

புதுடெல்லி, அக்.16-

நியாயமான இழப்பீடு கிடைக்க வழி செய்யும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட சட்டம்தான் அமலில் இருந்து வருகிறது. இந்த சட்டத்தில் நிலம் கையகப்படுத்துதலால் பாதிப்புக்கு ஆளாவோரின் மறுகுடியமர்வு தொடர்பாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. இதே போன்று அந்த சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன.

எனவே மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 27-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார்.

119 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு மாற்றாக, புதிதாக இப்போது இயற்றியுள்ள சட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தலாம் என மத்திய அரசுக்கு சில மாநில அரசுகள் யோசனை கூறி உள்ளன.

அப்படி அடுத்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் புதிய சட்டத்தை அமல்படுத்துகிறபோது இந்த சட்ட அமலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கால அவகாசம் கிடைக்கும் என அவை தெரிவித்தன.

இருப்பினும் இந்த புதிய சட்டம் மக்களுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் புத்தாண்டு பரிசாக ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதுபற்றி மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நிச்சயமற்ற தன்மையை குறைக்கிற வகையில், அது குறித்த அறிவிக்கையை விரைவில் வெளியிடுவோம். இந்த சட்டத்தை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு எடுத்துள்ளோம்” என கூறினார்.

மத்திய அரசு இந்த புதிய சட்டத்தை புத்தாண்டு முதல் அமல்படுத்த முடிவு எடுத்துள்ளதால், மாநில அளவிலான நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மறு குடியமர்த்தல் ஆணையம் உள்ளிட்ட 6 உள் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகளை இந்த ஆணையம் கையாளும்.

இந்த சட்டத்தின் வரைவு விதிகளை மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் 2 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் புதிய சட்ட அமலாக்கலுக்கு தேவைப்படும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய சட்டம் அமலுக்கு வந்தபின்னர், ஒரு நிலம் அரசாலோ, அரசு அமைப்புகளாலோ கையகப்படுத்தப்படுகிறபோது, அதற்கு நில உரிமையாளர்கள் நியாயமான, நேர்மையான இழப்பீட்டு தொகை பெற வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி;மாலைமலர் 

அமெரிக்கா நியூ யார்க்கில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்!

அமெரிக்கா நியூ யார்க்கில்  வாழும் அதிரையர்கள் இன்று தியாக திருநாளாம் பக்ரித் பண்டிகையை சிறப்போடு கொண்டாடினர். அந்த வரிசையில் அதிரையர்கள்  நியூ யார்க்கில்  பள்ளிகளில்  தொழுகையை முடித்து  ஒன்று  கூடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை  பரிமாறும் காட்சிகள்