Wednesday, October 9, 2013

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சென்ற கார் கவிழ்ந்து விபத்து



ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. சென்ற கார் கவிழ்ந்து விபத்து


ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மனிதநேய மக்கள்  கட்சியின்  மூத்த தலைவருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா நேற்று ராமநாதபுரத்தில் இருந்து காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் ரோட்டில் வந்தபோது முன்னால் சென்ற லாரியை அந்த கார் முந்துவதற்கு முயன்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக கார் ரோட்டில் கவிழ்ந்தது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக ஜவாருல்லாவும், கார் டிரைவரும் காயமின்றி தப்பினார்கள். பின்னர் வேறு காரை வரவழைத்து அவர்கள் புறப்பட்டு
சென்றனர் 
நன்றி;மாலைமலர் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval