Saturday, October 5, 2013

அமீரகம் துபாயில் நடைபெற்ற கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக் கூட்டம்.!


அமீரக துபையில் கீழத்தெரு மஹல்லாவின் மாதாந்திரக்கூட்டம் 04/10/2013 வெள்ளிக்கிழமை அன்று இஷாஹ் தொழுகைக்கு பின் அப்பாஸ் ரூம் மாடி மேல்தளத்தின் வளாகத்தில் அமீரக துபை கீழத்தெரு மஹல்லா தலைவர் ஜனாப் M.அப்துல் ஜலீல் அவர்கள் தலைமை ஏற்க சகோதரர் A.இஸ்மாயில் கஹ்ராத் ஓதிசிறப்புடன் ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் நல்ல பல தீர்மானங்களும் பல செய்திகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கீழத்தெரு மஹல்லா வாசிகளின் பல கோரிக்கைகளும் கேட்டு அறியப்பட்டன.
 

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய தீர்மானங்கள் :


1,கீழத்தெரு மஹல்லாவுக்கு உட்பட்ட செய்னாங்குளத்தை தூர்வாரி அப்பணியை நல்லபடி செய்து முடித்தமைக்காக அதிரை பேரூராட்சித் தலைவர் S.H.அஸ்லம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்ளப்பட்டது.

2,கீழத்தெரு மஹல்லாவில் இரண்டு மக்தப் பள்ளிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மூன்றாவது மக்தப் பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருவதால் நியமிக்கப்பட்டு இருக்கும் உஸ்தாதுக்கான மாத சம்பளம் கொடுக்க ஸ்பான்சரை ஏற்ப்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

3,நமதூருக்கு இரவு நேரத்தில் அவசர சிகிச்சைக்கு டாக்டர்கள் அவசியம் தேவைப்படுவதால் நமதூரில் இயங்கி வரும் ஷிஃபா மருத்துவ மனையில் பகல் நேரத்தில் பணிபுரியும் டாக்டர்களில் யாராவது ஒரு டாக்டரை இரவுப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்று அதன் நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதி தெரியப்படுத்துவது பற்றி பேசப்பட்டன.

4,காட்டுப்பள்ளி அருகில் கட்டப்பட்டு நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் பொது சுகாதார வளாகத்தை பற்றி நமதூர் பேரூராட்சி தலைவருக்கு மீண்டும் கடிதம் எழுதி கேட்பது பற்றி பேசப்பட்டன.

5,இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளன்று டேரா துபாய் ஈத்கா மைதான வளாகத்தில் நடக்கும் அனைத்து மஹல்லா அதிரையர்களின் சந்திப்பின் போது கீழத்தெரு மஹல்லா வாசிகள் அனைவர்களும் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு தெரு மற்றும் ஊர் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன.

6,துபையில் இயங்கி வரும் கீழத்தெரு மஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது என்று ஒருமனதாய் தீர்மானித்துள்ளதால் விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஆகவே இன்ஷா அல்லாஹ் அடுத்த கூட்டத்திற்கு துபையில் வாழும் அனைத்து கீழத்தெரு மஹல்லா வாசிகளும் தவறாது கலந்து கொண்டு தாங்களின் மேலான ஆலோசனைகளை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

மற்றபல விசயங்கள் கலந்துரையாடலுக்குப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அமீரக கீழத்தெரு மஹல்லா தலைவர் நன்றி கூற, கூட்டம் இனிதாய் முடிவுற்றன.


இப்படிக்கு, 
அமீரக கீழத்தெரு முஹல்லா நிர்வாகிகள்

புகைப்படங்கள் : குத்புதீன்

செய்தித்தொகுப்பு : துபையிலிருந்து அதிரை மெய்சா










No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval