Wednesday, October 2, 2013

Flash News:தக்வாபள்ளி மீன் மார்கெட்டில் தீவிபத்து!!Updated.

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்மார்கெட்டில் சற்று நேரத்திற்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.


இதன் காரணமாக ஊர் முழுதும் மின்தடை ஏற்பட்டுள்ளது .
தாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு .மார்கெட்டில் உள்ள காவன்னா கடையின் அடுமனை முற்றிலும் எரிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது

மேலும் INTJ நகரத்தலைவர் கமால்-ன் உணவகம் எரிந்துள்ளது அருகில் உள்ள தொப்பி கடை மற்றும் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை எரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அதிரையில் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொண்டுள்ளனர்.


தற்பொழுது மின்வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது .காயமடைந்த தீயணைப்பு அதிகாரி அதிரை  அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சரியாக 11: 35 (எல்லாம் அணைந்த பின் )மணிக்கு பேராவூரணியிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் தற்பொழுது வந்துள்ளது.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval