Monday, October 21, 2013

சினிமாவை நோக்கி இஸ்லாம்!


 
           "இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்களே இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் சிலர் தவறாக விளக்கம் சொல்லியே விலக்கி வைத்துவிட்டார்கள். படங்களை வீட்டில் வைத்து வணங்குவதுதான் தவறு. ஆனால், படமே வீட்டில் இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்படி விளக்கம் சொல்கிறவர்கள்தான் ரூபாய் நோட்டை பாக்கெட்டி லேயே வைத்திருக்கிறார்கள். அதில் காந்தி படம் இருக்கிறதே.. எனவே இப்படி தவறான விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால் நாம் காணாமலேயே போய்விடுவோம். சினிமா என்பது ஹராம் (தீமை) அல்ல. இதுபோன்ற ஊடகங்களை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்துதான் ஹராம்' -கவிக்கோ அப்துல்ரகுமான் இந்த மெசேஜை சொன்ன இடம், "தி மெசேஜ்' என்ற திரைப்படம் தமிழில் திரை யிடப்பட்டு குறுந்தகடாக வெளியிடப்பட்ட சென்னை ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில்.

பாலைவனச் சிங்கம் எனப்படும் "ஒமர் முக்தார்' படத்தைத் தந்த இயக்குநர் முஸ்தபா  அக்கட், 1976-ல் எடுத்த மற்றொரு மகத்தான படைப்பு "தி மெசேஜ்'. முகமதுநபியின் வாழ்வையும் இஸ்லாத்தின் வரலாற்றையும் விளக்கும் திரைக்காவியம். 35ஆண்டுகள் கடந்தும் சிறந்த படைப்பாக உயர்ந்து நிற்கிறது. 

நபியின் உருவத்தைக் காட்டாமலேயே மற்ற கதாபாத்திரங்கள் மூலமாகவும் பிரம்மாண்டமான பட உருவாக்கத்தின் மூலமாகவும் வரலாற்றைச் சொன்ன இப்படம் இப்போது மாஸ் கம்யூனிகேஷனால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ம.ம.க.  எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி,  அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர், எல்.கே.எஸ் ஜூவல்லர்ஸ் இம்தியாஸ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வில் அக்டோபர் 12-ந் தேதி வெளி யிடப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன், “""சினிமா என்பது உருவாகி நூறாண்டுகள் ஆகிவிட்டது. நீங்கள் (தமிழக இஸ்லாமி யர்கள்) இப்போதுதான் இதற்குள் வந்திருக்கிறீர் கள். இதனை சரியான முறையில் கையிலெடுங்கள். நீங்கள் உள்ளே வராமல் சினிமாவை எதிர்ப்பதால்தான் வாமனப் படங்களெல்லாம் விஸ்வரூபம் எடுத்துவிடுகிறது'' என்றார். 

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும் போது,

""இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, நாங்கள் உள்பட எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது. பெண் சிசுக்கொலை தடுப்பு, பெண்களின் உரிமைகள், கைதிகளின் உரிமை, ஒடுக்கப்பட்டோர் நலன் இவை பற்றியெல்லாம் முகமது நபி  சொல்லியிருப்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளைக் கொண்ட படங்களை தமிழில் எடுக்க முன்வரவேண்டும்'' என்றார்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மதவாத அரசியல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அன்பையும் சகோ தரத்துவத்தையும் வலியுறுத்தும் மார்க்கத் தையும், பிற மதத்தினருடன் இணைந்து  வாழும் இங்குள்ள இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறையையும் விளக்குவதற்கு சினிமா என்ற ஆயுதம் தேவை என்ற கருத்து படவெளியீட்டு விழாவில் பரவலாக வெளிப்பட்டது.  திரைத்துறை நோக்கி தமிழக இஸ்லாமியர்களின் பார்வை திரும்புகிற தருணம் இதுவோ!
courtesy:   Nakkeeran
தகவல் சவ்கத் அலி 
BOSTON U.S.A.

1 comment:

  1. When I watched couple of years before, I really enjoyed and encouraged others to watch.

    Fazee Canada.

    ReplyDelete

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval