ரேஷன் கடையில் இன்று ஜீனி, துவரம்பருப்பு வழங்கப்படும்னு போர்டு போட்டிருந்ததும் என் மனைவி அவசர அவசரமாக ரேஷன் அட்டையை எடுத்துக்கிட்டு போனார்... அடுத்த இருபது நிமிஷத்துல ஒரே உற்சாகமாக என்னிடம் வந்து "என்னங்க...நம்ம கார்டுக்கு 2 கிலோ துவரைங்க...
சூப்பரா இருக்குங்கன்னு" பையிலிருந்து துவரையை அள்ளி காட்டினார்... பளீரென்ற சிவப்பு நிறத்தில் துவரை... எனக்கு பகீரென்றது...சமீபத்தில்தான் ஆனந்தவிகடன் வலைத்தளத்தில் இந்த மைசூர் பருப்பு என்கிற மசூர் பருப்பை பற்றி படித்திருந்தேன்...
நம்மையெல்லாம் முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் இந்தியாவிலேயே கேவலமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசின் சாமான்ய மக்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை... இது துவரை இல்லை... 10 ஆண்டுகளுக்கு முன்னர் தடைசெய்யப்பட மசூர் பருப்பு..
இப்போது, மீண்டும் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கிறது அரசு. இது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பீதியைத்தான் கிளப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது மசூர் பருப்பு. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையொட்டி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு ஏற்பட்ட அந்த பாதிப்புகளுக்கு மசூர் பருப்புதான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது.
அதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்போது அதே பருப்பை மீண்டும் தமிழக அரசு கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது.
‘குறைந்த விலையில் கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறோம்’ என்று அதற்கான செய்திகளையும் வெளியிட்டது அரசு. இதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரி ஆதிஜெகநாதன். அதை ஏற்று நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடையும் விதித்திருந்தது...
அந்த தடையையும் உடைத்து மக்களை ஒழித்தே தீருவேன் என கங்கணம் கட்டி இந்த மசூர் பருப்பை ரேஷன் கடைகளில் விற்க துவங்கியுள்ளது எடப்பாடியின் மக்கள் விரோத அரசு...
ஏற்கனவே டெங்கு பாதிப்பால் கொத்துகொத்தாக தமிழக மக்கள் இறப்பை சந்தித்து அதன் பாதிப்பின் அச்சத்திலும், பீதியிலும் உறைந்திருக்கும் இந்த நேரத்தில் அரசே நேரடியாக களம் இறங்கி மசூர் பருப்பு உருவத்தில் விஷம் வைக்க துவங்கியுள்ளது மிகுந்த வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளது..
.தயவு செய்து மக்களே...இந்த மசூர் பருப்பு விலை மலிவாக கிடைக்கிறது என வாங்கி உபயோகப்படுத்த வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
ஆனந்தவிகடன் மின்னிதழில் இது குறித்த தெளிவான பதிவை இட்டுள்ளார்கள்...அதை படித்த பிறகான பதிவுதான் இது...
✏Healer shankar
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval