Saturday, October 21, 2017

*தலை சிறந்த மனிதர்

மேதகு *அப்துல் கலாம்* அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஜனாதிபதி மாளிகைக்கு  வந்தார்.

வாசலில், ஒருவர் அவர் காலைத் தொட்டார்...உடனே திரு. கலாம் அவர்கள், 

“எழுந்திரு....என்ன வேண்டும் உனக்கு” என்று கேட்டாராம்....அதற்கு அந்த பணியாள், “நான் இங்கே ஜனாதிபதியின் ஷூக்களைத் துடைத்து பாலிஷ் போடுபவன்....உங்கள் ஷூக்களைத் தாருங்கள்” என்று கேட்டாராம்.

உடனே, திரு.கலாம் அவர்கள், 

“You are dismissed…” இனி இங்கே உனக்கு வேலையில்லை” என்றாராம்.

அதற்கு அந்த  பணியாள்,

”உங்களுக்கு வேலை  வந்த உடனே, என்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டீர்களே” என்று வருத்தத்துடன் கூறினாராம்.

உடனே, திரு. கலாம் அவர்கள் சிரித்துவிட்டு,

”You are not dismissed but transferred”, இனி, நீ தோட்ட வேலை பார்.....என் ஷூக்களை கவனிக்க எனக்குத் தெரியும்” என்று கூறினாராம்.

அவர் பதவி, நிறைவு பெற்று, மாளிகையை விட்டு செல்லும்போது, அந்த தோட்டப் பணியாளரை அழைத்து,

”என் வேலை போய்விட்டது....ஆனால் நீ இன்னும் இங்கே வேலை செய்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறி, பூவாளியைக் கொண்டுவரச் சொன்னாராம்.

அவர் கொண்டு செல்ல வைத்திருந்த இரண்டு பெட்டிகளையும் நீர் ஊற்றி கழுவச் சொன்னாராம்..

ஏன் என்று பணியாளர் கேட்டதற்கு, 

இந்த மாளிகையின் தூசி கூட என்னோடு வர நான் விரும்பவில்லை  என்று சொன்னாராம்.

*தனக்காக வாழாத, தேசத்திற்காக வாழ்ந்த சிறந்த மாமனிதர் அவர்.*

__________________________
*By s j s k*

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval