Thursday, October 5, 2017

முயற்சி செய்வோம், வெற்றி அடைவோம்


_ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்._

_வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை._

_ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். 'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள். அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்._

_என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்._

_தோற்றுவிடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று  முயற்சிக்காமலேயே தேடி வரும் அற்புதமான வாய்ப்புக்களையும் அதன் பயனையும் அடையாமல் விட்டுவிடுகிறார்கள்._

*_தெய்வத்தான் ஆகா தெனினும்_* *_முயற்சிதன்_*
*_மெய்வருத்தக் கூலி_ தரும்._*
தகவல் N.K.M.புரோஜ்கான் 
சிட்னி ,ஆஸ்திரேலியா 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval