Saturday, October 21, 2017

பட்டா தொலைத்து விட்டதா கவலை வேண்டாம்!!!

Image may contain: 1 person, eyeglasses
படித்து பயன் அடையுங்கள்! 
பகிர்ந்து மற்றவர்களுக்கும் உதவுங்கள்!
மனை பட்டா காணாமல் போனால் பரிதவிப்புக்கு ஆளாகிவிடுவோம். முன்புபோல வீட்டுக்குப் பத்திரம் மட்டும் போதும் என இருந்துவிட முடியாது. ஏனெனில் இப்போது பட்டாவும் அவசியம் ஆகிவிட்டது. ஒரு நிலம் உங்களுக்குச் சொந்தனமானது என்பதற்குப் பட்டா உங்கள் பெயரில் இருப்பது அவசியம். மேலும் வங்கிக் கடன் விண்ணப்பிக்க பட்டாவின் தேவை இருக்கிறது. பட்டா காணாமல் போனால் மீண்டும் விண்ணப்பித்து டூப்ளிகேட் பட்டா வாங்கிவிட முடியும். அதற்கான வழிமுறைகள் என்ன?
# பட்டா வாங்க தாசில்தார் அலுவலகத்தைத்தான் அணுக வேண்டும். அங்கே முதலில் விண்ணப்பிக்க வேண்டும். நகல் பட்டா கோரும் விண்ணப்பத்தையும், பழைய பட்டா நகல் அல்லது அதில் உள்ள விவரங்களைக் கொடுப்பது நம் பணியைச் சுலபமாக்கும். .
# பட்டாவுக்காக குறிப்பிட்ட தொகையை வங்கி செலான் மூலம் செலுத்த வேண்டும். எந்த வங்கி என்பதை தாசில்தார் அலுவலகத்தில் விசாரித்தால் தெரியும்.
# பட்டாவைப் பெற சில நடைமுறைகள் உள்ளன. தாசில்தாரிடம் டூப்ளிகேட் பட்டா கேட்டு மனு தந்த பிறகு, கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் விசாரணைக்குப் பிறகு மனு மீது ஒப்புதல் பெற வேண்டும்.
# விசாரணையின் அடிப்படையில் பட்டா கிடைக்கும். பட்டாவைப் பெற அதிகபட்சமாக 15 நாட்கள் கால அவகாசம் உண்டு.
--- வழக்கறிஞர் பாண்டியன்
"தமிழக அறப்போர் இயக்கம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval