Thursday, October 19, 2017

ஆசிரியை அன்னபூரணி அவர்களை வாழ்த்துவோம்.

நேற்று இந்தச் செய்தியை தந்தி தொலைக்காட்சி செய்தியில் பார்த்த கணத்தில் கண்ணீரே வந்துவிட்டது.
இந்த வேலையே வேண்டாமென்று ஒதுங்கிப் போக நினைத்த ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஸ்மார்ட் க்ளாஸ் எல்லாம் அமைத்து தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டிருக்கிறார்.
3-ம் வகுப்பு படிக்கும் கிராமப்புற மாணவியின் ஆங்கிலப் பேச்சினைப் பாருங்கள். 'நன்றாகப் படிக்கும் மாணவர்களை மட்டும்' சேர்த்துக்கொண்டு அவர்களின் உழைப்பில், மூளையில் தங்கள் வெற்றியாகப் பறைசாற்றி மலையளவுப் பணம் பெற்றுக்கொண்டு பெற்றோர்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு எப்படி முடிவுகட்டுவது என்று தன் சொந்தப் பணத்தில் எளிமையாகச் சாதித்துக்காட்டி இருக்கிறார்.
அரசு ஆசிரியர்கள் இதனை முன்மாதிரியாகக் கொண்டு போராடி, தேவையான வசதிகள் பெற்று, 1 முதல் 10 வகுப்புவரை உள்ள மாணவர்களை தமிழ், கணிதம், ஆங்கிலத்தில் கரையேற்றிவிட்டால் போதும். தமிழ்நாடு வல்லரசாகும். நல்ல ஆட்சியாளர்கள் கிடைப்பார்கள். இலவசங்கள், குடி, லஞ்சம் என்று கொடுத்து மக்களை ஏமாற்றும் வெத்து வேட்டுகள் காணாமல் போவார்கள்.
செய்வார்களா?
ஆசிரியை அன்னபூரணி அவர்களை வாழ்த்துவோம்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval