Saturday, October 8, 2016

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்


இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள்.

Thursday, October 6, 2016

ஆண்களை பற்றி எழுதியது:-

👍அவன் வெளியில் சுற்றினால் #உதவாக்கரைஎன்போம்.
👍வீட்டிலேயே இருந்தால் #சோம்பேறி என்போம்.
👍குழந்தைகளை கண்டித்தால் #கோபக்காரன்என்போம்.
👍கண்டிக்கவில்லை எனில் #பொறுப்பற்றவன்என்போம்.
👍மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில்#நம்பிக்கையற்றவன் என்போம்.

உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்...உள்ளாட்சி 7:.. சாதித்த தலைவி!

நீர் நிறைந்த குளக்கரையில் ஆதிக்கத்தூர் பஞ்சாயத்து தலைவி சுமதி
திருவள்ளூர் நகரம். கடும் வெயில் சுடுகிறது. தரைப் பாலம் அடியே கூவம் ஆற்றிலும் வெயில் ஊர்கிறது. நகரைத் தாண்டி 30 நிமிடங்கள் பயணம். ஒரு திருப்பத்தில் திரும்பியதும் பசுமையான வயல்கள். இடையிடையே கால்வாய்கள். பசுமை போர்த்திருக்கிறது பூமி. இனிதே வரவேற்றது அதிகத்தூர் ஊராட்சி.

பயனுள்ள வரிகள்

 


Wednesday, October 5, 2016

ஷேர் பண்ணுங்க

   


பயனுள்ள வரிகள்

 


வாழக் கற்றுத்தரும் ஒவ்வொருவரும் ஆசான் தான்!

நமக்கு பாடம் சொல்லித்தருபவர் மட்டும் ஆசான் அல்ல! தன் வாழ்வையே பாடமாக கூறுபவரும் ஆசான் தான்!” என்ற இந்த வரிகளே பல கதைகள் சொல்லும்.  நாம் இதுநாள் வரை பள்ளிக்கு சென்று அங்கு பாடம் கற்பிப்பவரே ஆசன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறொம்.

Tuesday, October 4, 2016

அறிய புகைப்படம்

சுதந்திர இந்தியாவின் முதல் காலைப்பொழுது (ஆகஸ்ட்டு 16-1947)


தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்கள் ரத்து: தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

வெண்டைக்காய் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நோய்கள் குணமாகுமா?

hide caption Don't let the fear of slime keep you from trying okra.இரவில் ஊற வைத்த வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா? சமீப காலமாக சர்க்கரை நோயினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதற்கு வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியை எடுத்து வர வேண்டியிருக்கும்.

Monday, October 3, 2016

இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள்: சீனா அச்சம்


பிரான்ஸிடமிருந்து இந்தியா வாங்கும் ரபேல் போர் விமானங்கள் சீனா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்படும் என்று சீன ஊடகம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸிடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி கையெழுத்தானது. அடுத்த 36 மாதங்களில் ரபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பணிகளை பிரான்ஸ் தொடங்க உள்ளது.

மலச்சிக்கல் போக்கும் மருந்துகள்..!!


மலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல.மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அப்படிப்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்த எளிதான சில வழிமுறைகள் உங்களுக்காக...

Saturday, October 1, 2016

பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தபோது பஸ் தாறுமாறாக ஓடி பள்ளி மாணவி பலி



கேரள மாநிலம் மலப்புரம் நகரத்தில் உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் அமீர் என்பவரின் மகள் சித்தாரா பர்வீன் (வயது 14) 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் சித்தாரா பர்வீன் பள்ளிக்கு சென்றார். நேற்று மாலை பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாலை 6 மணிக்கு கூட்டம் முடிந்தது.

மனைவியை விருந்தாக்கி 8 பேரை கொன்ற சப்பாணி- தோண்ட தோண்ட சடலங்கள்!!


தங்கப் புதையல் ஆசைகாட்டி சபலிஸ்டுகளை மடக்கி அவர்களுக்கு மனைவியையே விருந்தாக்கி 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்பவர் ஒப்புக் கொண்டதால் திருச்சி போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.

திருச்சியில் கார் டிரைவர் தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சப்பாணி என்பவர் சிக்கினார்.

தன்னம்பிக்கைக்கு ஒரு உதாரணம்: குப்பைகளை சேகரித்து விற்று நர்சாக மாறிய பெண்



யவத்மாலில் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடைபெற்றது. குப்பைகளை சேகரித்து விற்ற பெண், கஷ்டப்பட்டு படித்து நர்சாக மாறியிருக்கிறார். அவருக்கு நாளை தையல்காரருடன் திருமணம் நடக்கிறது.

யவத்மால் ரவிதாஸ் நகரை சேர்ந்த 30 வயது பெண் பானு ஷேக் சபி. இவர் தனது 3 வயதிலேயே தந்தையை இழந்தார்.