தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என தொடரப்பட்ட வழக்கை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருபாகரன் வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த உள்ளாட்சி தேர்தல்களை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று அரசாணைகளும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிட்ட நீதிபதி அந்த மூன்று அரசாணைகளையும் ரத்து செய்வதாகவும் அறிவித்தார்.
வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval