அந்த புகைப்படத்தில் பிங்க் கலர் சட்டையில் உள்ளவர் சேலம் மாநகராட்சியில் குப்பை வண்டி ஓட்டுனராக இருக்கிறார்.. இவரது பெயர் குணசேகரன்.. நேற்று மதியம் எனது மணி பர்ஸ் காணமல் போனது. அதை கண்டெடுத்த இவர் என்னை தொடர்பு கொள்ள முயன்றபோது எனது செல்போனை தொடர்பு கொள்ள முடியவில்லை.. இருப்பினும் நேற்று இரவு 8:15 மணிக்கு என்னை போனில் தொடர்பு கொண்டு தகவல் தந்தார்.. இன்று காலை அவரே நேரில் வந்து எனது மணிபர்ஸை திரும்ப கொடுத்தார்.. அதில் ₹1420 பணம் இருந்தது.. 3 ATM கார்டும் இருந்தது..
ஆனால் எதுவுமே தவறாமல் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்ட இந்த மனிதரின் நேர்மையினை பாராட்டியே ஆக வேண்டும்.. இவரின் பெயருக்கு பொருத்தமாக குணமான நபர்.. எவ்வளவு வற்புறுத்தியும் அன்பளிப்பு எதையுமே அவர் வாங்கவில்லை.. கடைசியாக ஒரு கப் தேநீர் மட்டுமே அருந்த ஒப்பு கொண்டார்.. இவர் போன்ற சில நல்ல மனிதர்களால் இருப்பதால் தான் மனிதம் தழைக்கிறது.. மழையும் பொழிகிறது.. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval