Monday, October 31, 2016

பூனை பிரியாணி... சென்னையில் பகீர்...!!! அலறும் பிரியாணி பிரியர்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!


சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர் ஓட்டல் உணவுகளை , அதிலும் சாலையோர உணவுகளை அதிகம் வாங்கி உண்ணுவார்கள் அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக சென்னையில் பல இடங்களில் பூனைக்கறியை ஆட்டுக்கறி என சப்ளை செய்து அதை ஓட்டல் சாலையோர கடைகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவுதயாரித்து பறிமாறியதும் தெரியவந்துள்ளது.

தாம்பரம்  அருகே மப்பேடு என்ற இடத்தில் நரிக்குறவர்  கும்பல் ஒன்று  பூனைகளை மொத்தமாக வளர்த்துவருவதாகவும் தினந்தோறும் கொத்துகொத்தாக எங்கிருந்தோ பூனைகளை பிடித்து வருவதாகவும் அவைகளை கூண்டுகளில் அடைத்து வைத்து பூனைப்பண்ணைப்போல் வளர்ப்பதாக நெற்குன்றத்தை சேர்ந்த  வனவிலங்கு அமைப்பிற்கு( people for animal-PFI) ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனவிலங்கு  அமைப்பினர்  போலீசுக்கு புகார் அளித்துவிட்டு போலீசாருடன் அங்கு சென்றனர். இவர்கள் வருவதை முன் கூட்டியே அறிந்து கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த பூனைகளை அந்த அமைப்பினர் மீட்டு நெற்குன்றத்தில்  உள்ள அவர்களது அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

எப்படி விற்கிறார்கள்:

விசாரணையில் அந்த நபர்கள் சென்னை முழுதும் பல இடங்களில் கூண்டுகளை வைத்து பூனைகளை நூற்றுக்கணக்கில் பிடித்து வந்து அவைகளை மொத்தமாக அவித்து கொன்று , அதன் தோலை உரித்து துண்டு துண்டாக கரித்துண்டுகள் போல் வெட்டி அதை பாக்கெட்டுகளில் அடைத்து ஹோட்டல்களுக்கு சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

எங்கெங்கே விற்றுள்ளனர்:

சென்னையில் பல்லாவரம் , குரோம்பேட்டை , பூந்தமல்லி மற்றும் கோட்டூர் புரத்தில் உள்ள சில ஹோட்டல்களுக்கு பூனைக்கறியை சப்ளை செய்துள்ளனர்.

யார் யார் வாங்குகின்றனர்:

சில ஹோட்டல்கள் ஆட்டுக்கறியை 450 ரூபாய் கொடுத்து வாங்குவதை விட ஆட்டுக்கறியை விட மிருதுவான பூனைக்கறியை ரூ.100 க்கு வாங்கி பிரியாணி , குழம்பு வைத்து விற்கின்றனர். இது தவிர ரோட்டோர கடைகளிலும் பலர் இந்த கறியை ரூ.110 க்கு வாங்கியுள்ளனர்.

இதற்கு என்ன தண்டனை:

பூனை வனவிலங்கு பிரிவின் கீழ் வராததால் நாங்கள் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது என வனவிலங்கு அதிகாரிகள், தெரிவித்தனர். ஆனால் பூனையை நரிக்குறவர்கள் சாப்பிடுவார்கள் அதை யாரும் தடுக்க முடியாது , ஆனால் இது போல் பண்ணை போல் வளர்த்து வெட்டி விற்பனை செய்வது மிகப்பெரும் குற்றம் .

 ஹோட்டல் மற்றும் சாலையோர கடைகள் சில இதை வாங்கி பயன் படுத்துவதும் குற்றம் இதற்கு தண்டனை உண்டு அதை காவல்துறையும், உணவுப்பதுகாப்புத்துறையும் தான் எடுக்க வேண்டும் என வன அதிகாரி தெரிவித்தார்.

தற்போது அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டதால் விரைவில் அவர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளோம் . அவர்களை பிடித்தால் அவர்கள் எந்தெந்த ஹோட்டல்களுக்கு , சாலையோர கடைகளுக்கு கறியை சப்ளை செய்தார்கள் என கேட்டு அவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் நடவடிக்கை வரும் என்று (PFI)நெற்குன்றம் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

சாலையோர உணவகங்கள் பாதுகாப்பு அற்றவை என்பது தெரிந்தும் உழைப்பாளிகள், ஏழைகள், வெளியூரிலிருந்து வந்து தங்கி வேலை பார்க்கும் பேச்சுலர்கள் வேறு வழியில்லாமல் சாப்பிடுகின்றனர். இதில் இப்படி ஒரு மோசடியா?

இதனால் என்ன பாதிப்பு: இது பற்றி மருத்துவர் ஒருவரை கேட்ட போது. பூனைக்கறியும் மற்ற மாமிசம் போன்றது தான் . என்ன நாம் அதை சாப்பிட்டு பழகவில்லை. அதனால் சிலருக்கு ஒவ்வாமை வரலாம். அவ்வளவுதான். ஆனால் வியாபாரி ஒருவர் நுகர்வோரை ஏமாற்றுவது தண்டனைக்குறிய குற்றம் என்று தெரிவித்தார்.

என்ன செய்வது சாப்பிடும் போது அது பூனை பிரியாணியா , மாட்டன் பிரியாணியா என பிரித்து பார்க்க நாமென்ன ஆய்வுக்கூடமா வைத்திருக்கிறோம்

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval