நேற்று கூரியர் அனுப்பப் போயிருந்தபோது என்னிடம் 20 ரூபாய் சில்லறை இருக்கவில்லை. கூரியர் கடைக்காரர், அப்புறம் வீடு வரும்போது வாங்கிக்கொள்கிறேன் என்றார். சற்று முன் வந்தார். இப்போதும் சில்லறை இருக்கவில்லை. தேடிப்பிடித்து ஒரு 10 ரூபாய் நாணயமும் 10 ரூபாய் நோட்டையும் கொடுத்தேன். வாங்கிச் சென்றவர் நிமிடத்தில் திரும்பி வந்தார். 10 ரூபாய் நாணயம் செல்லாது என்றார். ஏன் என்பதற்கான விளக்கம் சொன்னார். அவரை அனுப்பியபிறகு இணையத்தில் தேடினேன். என்னிடம் இருப்பது போலிதான் எனறு உறுதியானது. தில்லியில்தான் போலி நாணயத் தயாரிப்பு நடைபெற்றுள்ளது.
போலி நாணயம் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? படத்தைப் பார்க்கவும்.
• மேலே 10 கோடுகளுக்குப் பதிலாக 15 கோடுகள் இருக்கும்.
• 10 என்ற எண் நாணயத்தின் நடுவே இருக்கும்.
• 10 என்ற எண்ணுக்கு மேலே ரூபாய்க்கான குறி இருக்காது.
• பாரத், இந்தியா என்ற சொற்கள் நாணயத்தின் இருபுறமும் இருப்பதற்குப் பதிலாக மேலே இருக்கும்.
தில்லியில் போலி நாணயம் தயாரித்த சஞ்சய் சர்மா, சுரேஷ் குமார், நரேஷ் குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval