Wednesday, October 19, 2016

சட்டம் அனைவருக்கும் சமம் இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது சவூதி அரேபியா.....!


சவூதி சௌதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரியாத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் வாய்ச்சண்டையில் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
துர்க்கி பின் சௌத் அல்-கபீர் என்ற சவூதி இளவரசருக்கு இந்த மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டோர் பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம். இளவரசர் கபீர் இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டோரில் 134வது நபர் என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. `பாதுகாப்பையும் நீதியையும் பாதுகாக்க` அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
vikadan

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval