சென்னையில் ஒரு பகீர் சம்பவமாக உடும்பை கொன்று அதன் ரத்தத்தை ரூ.5000/-க்கு விற்பனை செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகரில் ஒரு இடத்தில் நரிக்குறவர்கள் சிலர் உடும்பை பிடித்து அதை உயிருடன் கழுத்துப்பகுதியில் கீறி அதன் பீச்சியடிக்குக் ரத்தத்தை சுடச்சுட ஒரு கிளாசில் பிடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொடுக்கின்றனர்.
அதை வாங்கி சிலர் மடக் மடக் என்று குடிக்கின்றனர்.
சிலர் சிறிது அருவருப்புடன் குடிக்கின்றனர்.
ஆனாலும் யாரும் அதை தள்ளிவைக்கவில்லை.
காரணம் உடும்பு ஒரு உறுதியான விலங்கு , அதன் ரத்தம் ஆண்மை விருத்தி , தாதுபுஷ்டி மற்றும் சர்க்கரை, ரத்தக்கொதிப்புக்கு சிறந்தது என அவர்கள் நம்பியதால் சுடச்சுட பிடிக்கப்பட்ட உடும்பு ரத்தத்தை அருவருப்பு இருந்தாலும் சிறிது தண்ணீர் சேர்த்து குடிக்கின்ற காட்சி அதில் வருகிறது.
ஒவ்வொருவருக்கும் குழாயில் இருந்து தண்ணீர் பிடிப்பது போல் அந்த நரிக்குறவர்கள் உடும்பை சாய்த்து வழியும் ரத்தத்தை பிடித்து தண்ணீர் கலந்துகொடுப்பதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது.
உடும்பு கறி, ரத்தம் ஆகியவை உடம்புக்கு மிகவும் சிறந்தது என ஆதிமுதல் நம்புவதே காரணம்.
வனவிலங்குகள் பட்டியலில் அரிய விலங்காக உடும்பு உள்ளது.
சிங்கம் , புலிக்கு அடுத்து உடும்பு பாதுகாப்பு பட்டியலில் உள்ளது.
புலி , சிங்கத்தை கொல்வதும் உடும்பை கொள்வதும் ஒன்று தான்.
இதற்கு 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடும்பை கொன்று அதன் ரத்தத்தை நரிக்குறவர்கள் ஒரு கிளாஸ் ரூ. 5000/- க்கு விற்கிறார்களாம்.
இந்த வீடியோ இரண்டு நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval