Thursday, October 13, 2016

சவூதி அரேபியாவின் எண்ணெய் இருப்பு இன்னும் 70 ஆண்டுக்குதான் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது


Image result for crude oil images: சவூதி அரேபியாவின் எண்ணெய் இருப்பு இன்னும் 70 ஆண்டுக்குதான் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியாவுக்கு பெரும்பகுதி வருவாய் கச்சா எண்ணெய் மூலமாகத்தான் கிடைக்கிறது. இதன் மொத்த ஏற்றுமதி வருவாயில் கச்சா எண்ணெயின் பங்களிப்பு 75 சதவீதம். இந்நிலையில் சவூதி 5, 10, 30 ஆண்டு முதிர்வு காலத்துக்கான கச்சா எண்ணெய் சார்ந்த பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர். இது தொடர்பாக லண்டன், நியூயார்க்கில் முதலீட்டாளர் கூட்டம் நடத்த இருக்கிறது. தற்போது சுமார் 26,650 கோடி பேரல் கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது. 
இது இன்னும் சுமார் 70 ஆண்டுக்குதான் வரும் என்று தெரியவந்துள்ளது. எண்ணெய் வளத்தால் மட்டுமே பெரும் பகுதி ஈட்டிவரும் சவூதி பொருளாதாரத்துக்கு இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் இன்னும் 70 ஆண்டுகளில் மாற்று எரிபொருள் உருவாகலாம் என்பதால், கச்சா எண்ணெய் தேவையும் இதை சார்ந்துள்ள பிற நாடுகளில் சரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval