திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் ரகசிய எண்ணை பயன்படுத்தி பதினான்கரை லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை தாமரை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர், ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனத்தில், கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, டில்லி பாபு ஆகிய 2 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை நகரில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப, வங்கிகளில் இருந்து ஆறுமுகம் பணம் பெற்று வந்துள்ளார். அந்த பணத்தை எடிஎம்களில் நிரப்பிய வேலு, டில்லி பாபு ஆகியோர், பின்பு ஏடிஎம்களின் ரகசிய எண்ணை பயன்படுத்தி 14 லட்சத்து 65 ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், வேலு, டில்லி பாபு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval