Sunday, October 30, 2016

உங்கள் வங்கிப்பணம் ஃபேஸ்புக்கினால் திருடு போகிறதா? அதிர்ச்சி தகவல்


இணையம் மூலமாக உங்களது பணம் திருடு போகாமல் இருக்க வேண்டுமானால் முகநூல் பக்கத்தில் இருந்து இந்த பதிவுகளை அளித்து விடுங்கல் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில், நாம் அனைவரும் ஆன்லைன் வர்த்தகத்தையே பெரும்பாலும் விரும்புகிறோம். ஆனால், இதனை சாதூர்யமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் திருடர்கள், ஹேக்கிங் மூலம் தரவுகளை பெற்று எளிதாக பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர்.
ஆன்லைன் மூலம் பணம் திருடு போகாமல் தடுக்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சைபர் கிரைம் போலீசார் வழங்கியுள்ளனர். அதன்படி, முகநூல் பக்கத்தில், உங்களது பெயர் குறித்த முழுத் தகவலை பதிவிட வேண்டாம். உங்களது செல்போன் எண், பிறந்த தேதி ஆகியவற்றையும் அதில் பதிவிட வேண்டாம் என அவர்கள் அறிவுறுத்தியுளனர்.
முகநூல் மூலம் பெயர், செல்போன் எண், பிறந்த தேதி உள்ளிட்ட தரவுகளை பெரும் ஆன்லைன் திருடர்கள், வருமானவரித்துறை இணையதளத்தில் அதனை பதிவிட்டு உங்களது பான் கார்டு எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள். அதன்மூலம், பான் கார்டு தொலைந்து விட்டது என்று பதிவு செய்து புதிய பான் கார்டையும் பெற்றுக் கொள்கிறார்கள். தொடர்ந்து செல்போன் தொலைந்து விட்டது என்று கூறி எஃப்ஐஆர் பதிவும் பெற்றுக் கொள்கிறார்கள். அதனைக் கொண்டும், பான் கார்டு ஆதாரத்தையும் கொண்டும் உங்களது செல்போன் எண்களை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். அதனையடுத்து, உங்களது ஆன்லைன் வங்கி கணக்கின் பாஸ்வேர்டு மறந்து விட்டது என்று கூறி, அதனையும் பெற்றுக் கொண்டு எளிதாக மோசடியில் ஈடுபடுகிறார்களாம்.
அதேபோல், இந்த ஆன்லைன் திருடர்கள், தனிப் புரோகிராம்களை தயாரித்து, வங்கி இணையதளங்களை ஹேக்கிங் மூலம் முடக்கி விடுகின்றனர். அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வ சாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனராம். பெரும்பாலான வாடிக்கையாளர்கள், வங்கியில் இருந்து கொடுக்கப்படும் ஆன்லைன் கணக்குக்கான பாஸ்வேர்டுகளை மாற்றததும் ஆன்லைன் திருட்டுக்கு வழிவகுத்து விடுகிறது.
இதில், மற்றோரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், இந்த ஆன்லைன் திருட்டில் ஈடுபடும் நபர்களின் 75 சதவீதத்தினர் நன்கு படித்த இளைஞர்கள் தானாம்.
தனியார் வங்கியி ஏடிஎம் மையங்களில் இருந்து தரவுகள் திருடப்பட்டதாக எழுந்த சந்தேகத்தையடுத்து பாரத ஸ்டேட் வங்கி, 6 லட்சம் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை முடக்கியது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல், மற்ற தனியார் மற்றும் பொது துறை வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களை பின் நம்பர், அதாவது; ஏடிஎம் பாஸ்வேர்டு எண்ணை மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval