Thursday, October 27, 2016

தமிழ்நாடு வயது 60

Schools in chennai | List of Most Reputed schools in chennai ...நவம்பர் 1 - தமிழ்நாட்டுக்குப் பிறந்தநாள். ''இது தமிழ்த்தேசியப் பெருநாள்'' என்று ஜீவா சொன்னது இந்த நாளைத்தான்.உலகத் தமிழர்கள் நம்மை தொப்புள் கொடி உறவுகள் வாழும் நாடாக நினைக்கிறார்கள். நம்மைப் பெருமையாக மதிக்கிறார்கள். ஆனால் நாம் பெருமையாக வாழ்கிறோமா?
காவிரிக்காக கர்நாடகாவிடம் கையேந்தி, முல்லைப் பெரியாறுக்காக கேரளாவிடம் மடியேந்தி, கிருஷ்ணா மற்றும் பாலாறுக்காக ஆந்திராவிடம் பிச்சையெடுத்து நிற்கிறது தமிழ்நாடு.
கர்நாடகாவும் கேரளாவும் அடிமைப் பிரதேசத்தைப் போல அச்சுறுத்துகின்றன.தட்டிக் கேட்கத்தான் ஆள் இல்லை. எல்லாக் கட்சிகளும் கர்நாடகாவிலும் கேரளாவிலும் ஒரே மேடையில் இருக்கின்றன. இங்கு சாண் ஏறினால் முழம் இழுக்கும் மனிதர்களின் கையில் கட்சிகளின் தலைமைப் பதவி சிக்கிக் கிடக்கிறது.
எங்கேயாவது போய் எம்.பி. ஆனால் போதும் என்று நினைக்கும் ப.சிதம்பரமும் இல.கணேசனும் இருக்கும் நாட்டில் என்ன உரிமைகளைப் பெற முடியும்?
அண்ணா ஆரம்பித்த கட்சியை கருணாநிதியும் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை ஜெயலலிதாவும் தங்களது பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார்கள்.ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எதை எல்லாம் பேசினாரோ அதை எல்லாம் காவு கொடுத்தே வந்தார் கருணாநிதி. எந்த அடித்தட்டு மக்களுக்காக எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தாரோ அவர்களுக்குத் தொடர்பு இல்லாமல் கோடீஸ்வர, லட்சாதிபதிகளிடம் கட்சியை ஒப்படைத்தார் ஜெயலலிதா.
இவர்களை யார் மிரட்டிப் பணிய வைப்பது என்பதில் தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டு கட்சிக்கும் போட்டி. இந்தப் போட்டி அரசியலில் தமிழனின் வேட்டி கிழிந்து தொங்குகிறது.
- ஆனந்த விகடனில் நான் எழுதி இருக்கும் தமிழ்நாடு வயது 60 கட்டுரையில் சில பகுதிகள்!
Thirumavelan Padikaramu

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval