Monday, October 17, 2016

பெண் வேடமிட்டு நூதன முறையில் கொள்ளையடித்த மூன்று பேர் கைது!


கடலூரில் இரவு நேரங்களில் பெண் வேடமிட்டு லாரி ஓட்டுனர்களை வழிமறித்து கொள்ளையடித்திடும் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில்  பெண் வேடம் அணிந்து ஒரு கும்பல், புதுகோட்டையை சேர்ந்த முருகேசன் என்ற லாரி ஓட்டுனரை வழிமறித்து பணம் பறித்து கொண்டிருப்பதாக, அவ்வழியாக சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசாரை பார்த்த அந்த கும்பல் உடனடியாக தப்பியோடியது. இதில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தப்பியோடிய இருவரையும் பிடித்தனர்.

இவர்கள் வேலூரை சேர்ந்த சத்தியராஜ், விழுப்புரத்தை சேர்ந்த முருகவேல்,கடலூரை சேர்ந்தமணிகண்டன் என  தெரியவந்தது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval