Wednesday, October 12, 2016

ஐஸ்கிரீம் கொடுத்து 5 குழந்தைகள் கடத்த முயற்சி


திருத்தணி அருகே ஐஸ்கிரீம் கொடுத்து 5 குழந்தைகள் கடத்த முயன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தேவி, மணி, மோகன், பிரியதர்ஷினி, புன்னகை ஆகிய 5 குழந்தைகளுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து ஊருக்கு வெளியே மலை அடிவார கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென சுதாரித்து கொண்ட குழந்தைகள் அலறி கூச்சல் போடவே, அவ்வழியே வந்த பொதுமக்கள், அருகில் சென்று விசாரித்த போது அந்த நபர் தப்பியோடிவிட்டார். இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval