ஸ்மார்ட் போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பது இன்றியமையாத விஷயம். அதன் மூலம் அடையும் பயன்கள் நிறைய இருக்கின்றன. ஆனாலும், உங்கள் நலனை கருதி, இந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. இன்று 90% குடும்பங்கள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துகின்றன. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எளிமையாக, வசதியான விலையில் கிடைக்கின்றனவோ இல்லையோ, ஸ்மார்ட் போன்கள் எளிய விலையில் கிடைக்கின்றன. அத்தியாவசியம் என்பதை தாண்டி, தன் ஆடம்பரத்தை, கௌரவத்தை காப்பாற்றும் பொருளாக ஸ்மார்ட் போன் மாறி வருகிறது. ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்தையும், சிந்திக்கும் கற்பனை வளத்தையும் காக்கிறதா??? உண்மை #1 மன அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணியாக இருப்பது தூக்கமின்மை தான். நள்ளிரவு வரை / அதிகாலை எழுந்ததும் உங்கள் ஸ்மார்ட் போனுடன் ஒட்டிக் கொள்வது தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் அநாவசியமான கோபத்தை உண்டாக்குகிறது.
உண்மை #2 நீங்கள் எத்தனை நேரம் உங்கள் டிஜிட்டல் கருவிகளுடன் நேரத்தை செலவிடுகிறீர்களோ, அத்தனை அளவு நீங்கள் சிந்துகும் திறனில் கவனம் செலுத்துவதை தவறவிடுகிறீர்கள். எதற்கு எடுத்தாலும் இன்டர்நெட், நீங்களாக யோசித்தாலே இரண்டு நிமிடத்தில் கண்டறியலாம். ஆனால், இன்டர்நெட்டில் போய் தேடுவீர்கள். இதனால் உங்கள சிந்திக்கும் திறன் குறைகிறது. இதனால், கற்பனை திறனும் பாதிக்கப்படுகிறது. உண்மை #3 சமூக வலைத்தளம் ஒரு நல்ல பிளாட்ஃபார்ம் தான், அதை நாம் பயன்படுத்திக் கொண்டால். வெறுமென அதில் நேரம் கழிப்பது,. உங்கள் கற்பனை திறனை சீர்குலைந்து போக செய்கிறது. ஒரு நாள் நீங்கள் இதை அறியும் போது, ஏமாற்றம் அடைவீர்கள், அதனால் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகளும் உண்டு.
உண்மை #4 தற்போது மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போனால் மன அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது, இன்டர்நெட் மூலம் நமது தகவல்களை திருடுவது தான். சமீபத்தில் கூட ஒரு சராசரி பெண் ஆன்லைன் ஸ்டோரேஜ்-ல் சேமித்து வைத்திருந்த அந்தரங்க பதிவுகளை வெளியிட்டுவிடுவேன் என்ற ஒரு மிரட்டல் வெளியானது. மேலும், பல ஸ்மார்ட் போன் ஆப்கள், நமது தகவல்களை திருடிக் கொண்டு தான் இருக்கின்றன.
உண்மை #5 முற்றிலும் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை தவிர்ப்பது கற்பனையில் தான் சாத்தியம். ஏனெனில், அதன் மூலம் நாம் நிறைய நன்மைகளும் அடைகிறோம். ஆனால், அதை எவ்வளவு நேரம் நாம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் நமது உளவியல் மற்றும் ஆரோக்கியம் மீதான தீய தாக்கங்களின் சதவீதம் சார்ந்திருக்கிறது. கண்ணெரிச்சல் அடையும் வரை, மூளை சோர்வடையும் வரை தினமும் நாம் ஸ்மார்ட் போனை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லையே!
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval