தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் தசைப்பகுதிகள் மெலிந்து காணப்படுவதால் குடலிறக்கம் வர வாய்ப்புண்டு. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை ஆண், பெண் என வித்தியாசம் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் குடலிறக்கம் வரலாம்.
தொடர்ந்து இருமல், நீண்ட நாள் மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு போன்ற காரணங்களால் வயிறு புடைத்து குடலிறக்கமாக மாறுவதற்கும் வழி உள்ளது.
குடலிறக்கத்தினால் வயிற்றில் புடைப்புக் கட்டி உண்டாவதோடு வலியுறும் சேர்ந்து கொள்கிறது. மேலும், சில சமயம் குடல் உள்ளே செல்லாமல் மாட்டிக் கொள்வதுண்டு. அப்படி ஏற்படும் பட்சத்தில் குடல் அடைப்பு அல்லது குடல் அழுகிப் போதல் போன்ற ஆபத்தும் ஏற்படும்.
மாத்திரை மருந்துகளால் தசையில் ஏற்படும் ஓட்டையை அடைத்து விட முடியாது. எனவே அறுவை சிகிச்சை அவசியமாகிறது.
மேலும், வயிற்றில் எந்த இத்தில் குடலிறக்கம் வந்தாலும் லேப்ரோஸ்கோபி செய்து குடலிறக்கத்தை குணப்படுத்தலாம்.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval