மலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல.மலச்சிக்கலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அப்படிப்பட்ட மலச்சிக்கலை குணப்படுத்த எளிதான சில வழிமுறைகள் உங்களுக்காக...
நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு,தினை, வரகு, கொள்ளு போன்ற தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.எனவே முழுதானியங்களில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேருங்கள்.
அதிக அளவில் தண்ணீர் குடியுங்கள்.இரவில் படுக்கச் செல்லும் முன் வெதுவெதுப்பான சுடுநீரை குடிப்பது,காலை எளிதாக மலம் வெளியேற உதவியாக இருக்கும்.
மது,புகை கூடாது.பொறித்த உணவுகளுக்கு பதிலாக பழங்கள்,காய்கறிகள் எடுத்துக் கொள்ளுங்கள். கொய்யாப்பழத்தை விதையுடன் உண்ணலாம்.இது குடலின் இயக்கத்தை சீராக்குவதோடு,உள் அடுக்குகளில் இறுக்கத்தை நீக்கி மலச்சிக்கலை நீக்கும்.
பப்பாளிப்பழம் சிறந்த மலமிளக்கியாகும்.இரவு உணவின் போது ஒரு கோப்பை பப்பாளி பழச்சாறு அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
பசலைக்கீரை,வல்லாரைக்கீரை,முருங்கைக்கீரை இதில் ஏதேனும் ஒன்றை தேங்காய்,சீரகம் சேர்த்து உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும்.
மிக முக்கியமாக மலம் கழிக்கும் எண்ணம் வந்தவுடன் கழிவறைக்கு சென்று விட வேண்டும்.எக்காரணத்தைக் கொண்டும் மலம் கழிப்பதை தள்ளிப்போட கூடாது.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval