Sunday, October 23, 2016

சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில் விற்ற அடகுக் கடைக்காரர் கைது


சென்னையில் கொள்ளையடிக்கப்படும் செல்போன், லேப்டாப், டேப்லட் போன்ற வற்றை மாதந்தோறும் ரயிலில் ராஜஸ் தானுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவந்த அடகுக்கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 சாக்குமூட்டைகள் நிறைய 2,240 செல்போன்கள், லேப்டாப், ஐபேட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..>
சென்னையில் செயின், செல்போன் பறிப்பு சம்பவங்கள் பரவலாக நடந்த தைத் தொடர்ந்து, கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டது. பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவின்பேரில், கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் அன்பு மேற்பார்வையில் துணை ஆணையர் சுந்தரவடிவேல் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, நீலாங்கரையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட லோகேஷ், அஜித் ஆகியோர் பிடிபட்டனர். பால வாக்கம் பூங்கா தெருவை சேர்ந்த பிரவீன் குமார் (24) என்பவர் அவர்களது கூட்டாளி என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நீலாங்கரை உதவி ஆணையர் பாண்டியன், கானாத்தூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை யிலான போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண் டார். திருட்டு செல்போன்களை சித்தாலப் பாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள சந்தோஷ் அடகுக்கடையின் உரிமையாளரான ராஜஸ்தானை சேர்ந்த அனுமன்ராமிடம் (42) கொடுத்து பணம் பெற்றதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக அனுமன்ராமையும் தனிப்படையினர் பிடித்தனர். அவரது அடகுக் கடையில் சோதனை நடத்திய போது, 2 சாக்குமூட்டைகள் நிறைய 2,240 செல்போன்கள், 1 லேப்டாப், 10 டேப்லட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருட்டுப் பொருட்களை வாங்கி விற்ற குற்றத்துக்காக அவரை கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரணை அதிகாரிகள் மேலும் கூறியதாவது:
பிரவீன் குமார் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் உள்ளன. 10 பேரிடம் செல்போன்களை பறித்துள்ளார்.
அவற்றை அனுமன்ராமிடம் கொடுத் துள்ளார். அதை பெற்றுக்கொண்ட அனுமன்ராம் ரூ.10 ஆயிரம் மதிப்பு செல்போனுக்கு ரூ.2 ஆயிரமும், ரூ.5 ஆயிரம் மதிப்பு போனுக்கு ரூ.1,000, சாதாரண போனுக்கு ரூ.500 கொடுத்துள்ளார். இதுபோல, வழிப்பறி திருடர்கள் பலரிடமும் செல்போன், லேப்டாப், ஐபேட்களை அனுமன்ராம் குறைந்த பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
பின்னர் இந்த திருட்டு பொருட்கள் அனைத்தையும் மாதந்தோறும் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு ரயிலில் கொண்டுசென்று அங்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இதற்காக போலி ரசீதுகளும் தயாரித்துள்ளார். இதையே கடந்த 6 ஆண்டுகளாக தொழிலாக செய்து வந்துள்ளார்.
அவருடன் தொடர்பு வைத்துள்ள வழிப்பறி கொள்ளையர்கள் யார்? இதுவரை எவ்வளவு திருட்டு பொருட்களை ராஜஸ்தானில் விற்றுள்ளார்? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval