Saturday, October 1, 2016

மனைவியை விருந்தாக்கி 8 பேரை கொன்ற சப்பாணி- தோண்ட தோண்ட சடலங்கள்!!


தங்கப் புதையல் ஆசைகாட்டி சபலிஸ்டுகளை மடக்கி அவர்களுக்கு மனைவியையே விருந்தாக்கி 8 பேரை நரபலி கொடுத்ததாக சப்பாணி என்பவர் ஒப்புக் கொண்டதால் திருச்சி போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.

திருச்சியில் கார் டிரைவர் தங்கதுரை அண்மையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சப்பாணி என்பவர் சிக்கினார்.
அவரிடம் தங்கதுரையின் மொபைல் போன் இருந்ததால் சிக்கினார். தொடர்ந்து சப்பாணியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களை கக்கியிருக்கிறார் சப்பாணி.

தங்கப் புதையல் கொலைகள்
தன்னுடைய தந்தை உட்பட 8 பேரை கொலை செய்து பாசன் வாய்க்கால் பகுதிகளில் புதைத்து வைத்திருப்பதாகவும் சப்பாணி ஒப்புக் கொண்டார். இந்த கொலைகளுக்கு அடிப்படையே காரணமே தங்கப் புதையல்தானாம்.

மனைவியை விருந்தாக்குவது..
பணக்காரர்களை குறி வைத்து தங்கப் புதையல் இருப்பதாக நம்ப வைப்பது சப்பாணியின் வேலை. அப்படி பணத்துடன் தங்கப் புதையலை தேடி தம்முடன் வருபவர்களுக்கு மனைவியையே முதலில் விருந்தாக்குவது சப்பாணி ஸ்டைல்.

வாய்க்காலில் புதைப்பது..
 இந்த விருந்து முடிந்தவுடன் அவர்களது கதையை முடித்து வாய்க்காலில் புதைத்துவிட்டு அவர்களிடம் பணத்தை அபேஸ் செய்து ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார் சப்பாணி. கடந்த 2009-ம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 8 பேரை சப்பாணி கொலை செய்திருக்கிறார்.

கள்ளகாதலுடன் ஓடிய மனைவி
இதனிடையே மனைவி மோகனப் பிரியா கள்ளக் காதலுடன் ஓடிவிட்டார். அவரையும் தேடி கொலை செய்யும் வெறியில் அலைந்து திரிந்திருக்கிறார் சப்பாணி. இதனிடையேதான் தங்கதுரை சிக்க அவரையும் போட்டுத் தள்ளி இப்போது சிக்கிவிட்டார்.

தோண்ட தோண்ட சடலங்கள்...
சப்பாணியின் இந்த வாக்குமூலத்துக்கு அப்பால் தங்க புதையலை தேடும் நரபல் கும்பலுக்காக இக்கொலைகளை சப்பாணி செய்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சப்பாணி குறிப்பிட்ட இடங்களில் போலீசார் தோண்டிப் பார்த்தனர். அப்போது தோண்ட தோண்ட சடலங்கள் வந்தன. இது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval