Sunday, October 9, 2016

கொழுப்பை கரைக்கும் வெங்காயம்!

உணவுகளில் வெங் காயத்துக்கு தனி இடம் உண்டு. அதனால்தான் வெங்காய சட்னி, வெங்காய சாம்பார், வெங்காய பச்சடி, வெங்காய வடகம் என வெங்காய உணவுகளின் பட்டி யல் நீள்கிறது. வெங்காயத்தில் வைட்டமின் `சி’ சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் `சி’ சத்து அதிகமாக உள்ளது. பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்பதன் மூலம் அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.
வெங்காயம் ஒரு நச்சுக் கிருமி கொல்லியாக பயன்படுகிறது. உதாரணமாக, அம்மை மற்றும் காலரா பரவும் காலங்களில் வீடுகளைச் சுற்றிலும் சின்ன வெங்காயத்தை வெட்டி வைத்தால் அந்த நச்சுக்கிருமிகளை உள்ளிழுத்து, நோய்களிடமிருந்து நம்மை காக்கும் வல்லமை படைத்தது. மேலும் உடலை மெலிதாக்கவும், குரலை இனிமையாக்கவும், பித்தத்தை தணிக்கவும், மூளை சுறுசுறுப்படையவும் செய்கிறது வெங்காயம். இதுதவிர கொழுப்புச்சத்தை கரைத்து வயிற்றுக்கட்டிகளை நீக்கக்கூடியது.
வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டி அதில் மோர் விட்டு உப்பு, மிளகு, சீரகம் போட்டு தாளித்து பகல் உணவோடு சாப்பிட்டு வந்தால் அதன் சுவை மட்டுமல்ல… சுகமே தனி. புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலில் கபம் மற்றும் இதயக்கோளாறுகள் வர வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் அன்றாடம் வெங்காய பச்சடியை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval