ஆந்திராவில் அரசு அதிகாரி ஒருவர் வீட்டில், ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ஏறக்குறைய 14 வீடுகள், ஒரு அறை முழுவதும் வெள்ளிப் பொருட்கள் வாங்கி குவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
சாலை போக்குவரத்து ஆணைய ஊழியர் பூர்ணசந்திர ராவ், 1981-ல் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். பிறகு குண்டூர், ஓங்கோல் மற்றும் நெல்லூர் பகுதிகளில் RTA அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 34 வருட சர்வீஸில் அவர் குவித்துள்ள சொத்து மதிப்பு ஆந்திராவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று ஊழல்தடுப்பு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் அவர் வீட்டின் ஒரு அரை முழுவதும் வெள்ளிப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஆய்வு நடத்தியதில் அந்த வெள்ளி நகைகளின் மதிப்பு 60 கிலோ கிராம், தங்க நகை ஒரு கிலோ கிராம், 20 லட்சம் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் ஏழு அப்பார்ட்மென்டுகள், வினுகோண்டாவில் இரண்டு வீடுகள், குண்டூரில் ஒரு வீடு, ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவில் இரண்டு மனைகள் உள்ளிட்டவை பூர்ணசந்திர ராவின் அதிகாரபூர்வ சொத்துக்கள்.
பூர்ணசந்திர ராவ், இது அனைத்துமே அதிகாரபூர்வ சொத்துக்கள் என்றும், அதன் மதிப்பு மூன்று கோடி தான் என்றும் அவர் தரப்பில் தெரிவித்துள்ளார். ஆனால் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இதுவரை கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 25 கோடிகளுக்கு குறையாமல் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது சொத்து குவிப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
courtesy;vikadan
courtesy;vikadan
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval