Monday, January 27, 2014

இடஒதுக்கீடு பற்றி ஷம்சுதீன் காஸிமியின் உளறல்

ஏக இறைவனின் திருப்பெயரால்....

மோடியை விட தரம் தாழ்ந்த கா(வி)ஸிமி.

இஸ்லாத்தில் இடஒதுக்கீடு என்ற தலைப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதில் ஷம்சுதீன் காஸிமி குத்பா உரை நிகழ்த்தினார் இந்த தலைப்பில் உரைத் தொடங்கியதும் ஜனவரி 28ல் நடைபெறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாபெரும் இடஒதுக்கீடுப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவார் என்று பலரும் நினைத்திருப்பர்.

காரணம் இந்தப் போராட்டத்தை ஒருசில விஷமிகளைத் தவிற பிற ஜமாத்தில் உள்ளவர்கள் கூட அதிகமானோர் ஆதரிக்கவேச் செய்கின்றனர் என்பதால் அதிகமான மக்கள் ஆதரவாகப் பேசுவார் என்றே நினைத்திருப்பர்.

ஆனால் யானை தனது தும்பிக்கையின் மூலம் மண்ணை அள்ளித் தலையில் கொட்டிக் கொள்வதைப்போல் அவருடைய உரை அமைந்திருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்தளவுக்கு மொத்த முஸ்லீம் சமுதாயத்தையும் தாழ்த்திப் பேசிவிட்டு தன்னையும் தாழ்த்திக் கொண்டார்.

பெண்கள் மறைத்து வைக்கப்பட வேண்டிய மாணிக்கங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் சஹாபிப் பெண்கள் வந்து எங்களையும் போருக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிட்டனர் உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் மறைத்து வைக்கப்பட வேண்டிய மாணிக்கங்கள் நீங்கள் போருக்கு வரக் கூடாது என்றுக் கூறி விடுகின்றனர், கூறி விட்டு மீண்டும் அவர்களை நோக்கி போர் களத்தில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பது,
தண்ணீர் புகட்டுவதுப் போன்றப் பணிகளை மட்டும் செய்து கொள்ளுங்கள் என்றுக் கட்டளையிட்டதாக குரலை உயர்த்திக் கூறுகிறார்.

மறைத்து வைக்கப்பட வேண்டிய மாணிக்கங்கள் காயமுற்ற வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கு மட்டும் எப்படி வெளியில் வந்தார்கள் ?. எப்படி அல்லாஹ்வின் தூதரவர்கள் அழைத்துச் சென்றார்கள் ?.

பேராட்டத்தை எதிர்ப்போருடைய உணர்ச்சியை கிளறி விடுவதற்காக நீங்கள் மறைத்து வைக்கப்பட வேண்டிய மாணிக்கங்கள் என்று இவராக பில்டப் செய்கிறார்.

போர் களத்தில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதுஇ தண்ணீர் புகட்டுவதுப் போன்றப் பணிகளை பெண்கள் செய்துள்ளதாக மட்டுமே அறிவிப்புகள் உள்ளன.

துப்பாக்கியை கையில் கொடுத்து அழைத்துச் செல்லவில்லை.

நாமும் பெண்களை அழைத்துச்செல்லும் போது துப்பாகியையோ, வாளையோ, ஈட்டியையோ கையில் கொடுத்து அழைத்துச் செல்லவில்லை.

மாறாக ஜனநாயக அடிப்படையில் போராட்டம் செய்ய அழைத்துச் செல்கிறோம். அபாயகரமான  யுத்த களத்தில் காயமடைந்தப் போர் வீரர்களுக்கு நீர்புகட்டுவதை விடவும், சிகிச்சை அளிப்பதை விடவும் இது இலேசான  வேலை .

மஹரம் இல்லாமல் மாவட்டத் தலைவருடன் போகின்றனர்.

தஹ்வீத் ஜமாத்தில் அங்கம் வகிப்பவர்களுடைய அனைத்து வீடுகளிலும் அன்றைய தினம் பூட்டுத்  தொங்கும். பெரியோர் முதல் சிறயோர் வரை அனைவரும் சென்று விடுவர். பெண் மட்டும் தனித்து மாவட்டத் தலைவருடன் செல்வதுப் போன்று கொச்சைப் படுத்தப்பட்டப் பேச்சு வன்மையாக கண்டிக்கத் தக்கது. போராட்டம் முடிந்தப் பிறகு இதற்கு ஒவ்வொரு தவ்ஹீத் சகோதரர்களும் சரியான பதில் அளிப்பர்.

போராட்டத்திற்குப் பிறகு சாதித்தது என்ன ?.

ஒவ்வொரு போராட்டத்திற்குப் பிறகும் அண்ணா சாலை அலறியது, தீவுத்திடல் திணறியது, குடந்தைக் குலுங்கியது என்று மட்டும் அறிவிப்பார்கள் அதன்பிறகு நடந்தது ஒன்றுமில்லை என்கின்றார்.

சமீபத்தில் தான் இவர் எதோ ஒரு வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்கு வந்ததுப் போல் உலறுகிறார் ?.

முஸ்லீம் சமுதாயத்திற்காக இன்று 3/5 சதவிகிதம் இடஒதுக்கீடு கிடைத்திருப்பது அண்ணா சாலைஅலறியதால், தீவுத்திடல் திணறியதால், குடந்தைக் குலுங்கியதால் தான் என்பதை இவர் அறியாமல் போனதற்கு நாம் என்ன செய்ய முடியும் ?.

மோடியை விட தரம் தாழ்ந்த கா(வி)ஸிமி.

அரசாங்கத்திடமிருந்து இடஓதுக்கீடு கேட்பது நியாயமில்லை, ஏன் என்றால் ஏற்கனவே வேறொரு சமுதயாத்திற்கு கொடுக்கப்பட்ட இடஒதுக்கீட்டை பிடிங்கித் தான்  நமக்கு  தருவார்கள் இது அந்த சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதி என்கிறார்.

இன்னும் ஒருப்படி மேல் சென்று அந்த சமுதாயத்தில் திறமையாகப் படித்த மாணவனுக்கு போய் சேர வேண்டிய ஒதுக்கீட்டை திறமையாக படிக்காத முஸ்லீம் மாணவனுக்கு கிடைப்பதால் திறமையாகப் படித்த ஹிந்து மாணவனுக்கு இழைக்கப்படும் அநீதி என்கிறார்.

இதற்காக சங்பரிவாரத்திடம் இவர் என்ன வாங்கினார், இந்த பேச்சுக்கள் இவரை வெளிப்படையாகவே யூத கைக் கூலியாகக் காட்டுகிறது. இதனால் தான் யானை தனது தும்பிக்கையின் மூலம் மண்ணை அள்ளித் தலையில் கொட்டிக் கொள்வதைப்போல் அவருடைய உரை அமைந்திருக்கிறது என்றுக் குறிப்பிட்டோம்.

சமீபத்தில் மோடி இதைத் தான் கூறுகிறார் சிறுபான்மை, சிறுபான்மை என்றால் பெரும்பான்மை மக்களின் நிலை என்ன என்றுக் கேட்கிறார். அதனால் இவருக்கும் மோடிக்கும் என்ன வித்தயாசம் ?.

மேலும் ஓசியில் கிடைக்கும் இடஒதுக்கீடு நமக்குத் தேவையா ? திறமையாகப் படித்து  முன்னேற வேண்டும் என்கிறார்.

ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாத, இரண்டு ஆடைகளைப் பெற முடியாத சொந்த வீட்டில் குடி இருக்க முடியாத 36 சதவிகித முஸ்லீம்கள் தனது பிள்ளகளை எப்படி மேல்படிப்பு படிக்க வைத்து அரசாங்க உத்தியோகத்தில் அமரத்துவது ?. 

அந்த நிலையில் இவர் இருந்தால் இதைச் சொல்லி இருக்க மாட்டார் வெள்ளையில் அழுக்குப் படாத, உடலுக்கு அசைவு ஏற்படாத இமாமத் வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு மேலும் மார்க்கத்தை வைத்து பல வழிகளில் வயிறு வளர்க்கும் இவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் முஸ்லீம் மக்களுயைட நிலை அறியாமல் உலறுகிறார்.

அன்று ஹராம் இல்லை> இன்று ஹராமா ?.

ஜெயலலிதா அவர்கள் இடஒதுக்கீட்டடிற்காக ஆணையம் அமைத்தப்பொழுது அதன் நகலைப்பெறுவதற்காக சென்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அணியில் இவரும் ஒருவர் அன்று அது அவருக்கு ஹராமாகத் தெரியவில்லையா ?.

இன்று எப்படி ஹராமாகத் தெரிந்தது !. இன்று  இதை ஹராமாக சித்தரிப்பதற்கு சங்பரிவாரத்திடமிருந்து எத்தனைப் பெட்டிகளை வாங்கினார் ?.

இன்னும் விரிவான தகவல்கள் இடஒதுக்கீட்டுக்குப் பிறகு இன்ஷா அல்லாஹ் தொடரும்....

-- 
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. திருக்குர்ஆன் 28: 83.

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Thanks for : jrseasy@gmail.com\
தகவல் ;N .K .M .புரோஜ்கான் 
அதிரை

    

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval