கவிக்கோ அப்துல்ரகுமான், தமிழின் பிரபலமான கவிஞர். இவர், பால்வீதி, சுட்டுவிரல், உன் கண்ணால் தூங்கிக்கொள்கிறேன் என பல கவிதை நூல்களைத் தமிழுக்குத் தந்திருக்கிறார். தமிழில் ஹைகூவையும் கஜலையும் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கே உண்டு. கவியரங்க மேடைகளிலும் தனி ஆளுமை செலுத்திவந்தவர் அப்துல்ரகுமான். வாணியம்பாடி கல்லூரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற கவிக்கோ அப்துல்ரகுமான், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
மூன்று வாரங்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அப்துல்ரகுமான், மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்து வமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ‘அவருக்கு சுவாசப்பிரச்சினை இருக்கிறது. விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார்’ என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Courtesy: Nakkeeranமூன்று வாரங்களுக்கு முன் டைபாய்டு காய்ச்சலால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அப்துல்ரகுமான், மீண்டும் உடல் நலக்குறைவால் சென்னை நந்தனத்தில் இருக்கும் தனியார் மருத்து வமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை இலக்கியவாதிகளும், அரசியல் பிரமுகர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ‘அவருக்கு சுவாசப்பிரச்சினை இருக்கிறது. விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவார்’ என அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் 'ஷவ்கத் அலி
BOSTON ;U.S.A
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval