Tuesday, January 28, 2014

இறைவனின் உதவியால் இன்று வெற்றிகரமாக நடந்தது சிறை நிரப்பு போராட்டம்

இறைவனின் உதவியால்  இன்று வெற்றிகரமாக சிறை நிரப்பு போராட்டம்  தமிழ் நாட்டில்  சென்னை, கோவை, நெல்லை மற்றும் திருச்சி போன்ற இடங்களில் வெற்றி கரமாக நடைபெற்றது, திருச்சியில்  பின்வரும் வாசகம் கொண்ட கோசங்கள் எழுப்பப்பட்டு, பக்கிர் முகமது அல்தாபி உரையுடன் போராட்டம் நிறைவு பெற்றது.








அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

போராட்டம் இது போராட்டம்

ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின்

உரிமை மீட்புப் போராட்டம்

போராட்டம் இது போராட்டம்

போர்க்குணம் கொண்ட முஸ்லிம்களின்

உரிமை மீட்புப் போராட்டம்

சீறிப்பாயும் இளைஞர்படையில்

சீறிப்பாயும் இளைஞர் படையில்

சிறுவர் மகளிர் முதியோர்கள்

சிறைக்குச் செல்லும் போராட்டம்

தியாகம்

சொத்தை இழந்தோம்

சுகத்தை இழந்தோம்

விடுதலைக்காக அனைத்தும் இழந்தோம்

சொந்த மண்ணில் இப்போது

அகதிகளாய் நிற்கின்றோம்

உயிரைக்கொடுத்தோம்உயிரைக் கொடுத்தோம்

விடுதலைக்காக உயிரைக் கொடுத்தோம்

விடுதலை பெற்ற பின்னாலே

வீதியில் நாங்கள் நிற்கின்றோம்

வேலை கேட்டு நிற்கின்றோம்

வெள்ளையனை விரட்டி அடித்த

சிப்பாய் கலகம் யாராலே

வெள்ளையனை விரட்டி அடித்த

கிலாபத் இயக்கம் யாராலே

தேசிய ராணுவம் அமைப்பதற்கு

அள்ளிக் கொடுத்தது எம் முன்னோர்

செக்கிழுத்த சிதம்பரனார்

கப்பல் வாங்கியது எம்மாலே

ஹைதர் திப்பு மாப்பிள்ளைமார்

சிந்திய இரத்தம் மறந்தாயோ

கப்பல் படையை உருவாக்கி

வெள்ளையனுக்கு பாடம் புகட்டிய

குஞ்சாலி மரைக்காயர் மறந்தாயே

மறந்தாயே மறந்தாயே

மாப்பிள்ளா கலகத்தை மறந்தாயே

பள்ளிவாசலையும் போர்க்களமாக்கிய

கூனி மஸ்ஜிதை மறந்தாயே

நேதாஜிக்கு வாரித் தந்த

வள்ளல் ஹபீபையும் மறந்தாயே

வ.உ.சிக்கு வாரிக் கொடுத்த

பக்கீர் முஹம்மதை மறந்தாயே

நாங்கள் சிந்திய இரத்தத்தில்

எங்கள் முன்னோர் தியாகத்தில்

ஆட்சிக்கு நீங்கள் வந்தீர்கள்

தியாகம் செய்த எம் சமுதாயத்தை

நன்றி கெட்டு மறந்தீர்கள்.

அவலம்
60 ஆண்டுகள் பின்தங்கி

அல்லல்படும் எங்கள் நிலையை

ஆவணங்களும் அறிக்கைகளும்

ஆதாரத்துடன் சொல்லுதே

அலட்சியம் காட்டும் அரசியல்போக்கு

இன்றோடு தொலையட்டும்

வெள்ளையனை வெளியேற்ற

ஆங்கிலத்தைத் தடை செய்தோம்

படிப்பில்லாமல் போனதாலே

பாதாளத்தில் கிடக்கின்றோம்

படிப்பில்லாமல் போனதாலே

அரபு நாட்டிலும் அடிமையானோம்

நாட்டை ஆண்ட கூட்டம் நாங்கள்

நாதியற்று நிற்கின்றோம்

நாட்டுக்காக உழைத்த நாங்கள்

நாடு கடந்து பிழைக்கின்றோம்

அரபு நாட்டுப் பாலைவனத்தில்

ஒட்டகம் மேய்த்துப் பிழைக்கின்றோம்

ராஜ்ஜியத்தை ஆண்ட நாங்கள்

பூஜ்ஜியமாய்க் கிடக்கின்றோம்.

பூஜ்ஜியத்தை மாற்றச் சொல்லி

போராடவே வந்துள்ளோம்.

மத்திய அரசே மாநில அரசே

சொல்வாயா நீ சொல்வாயா

கல்விப் பணியில் முஸ்லிம்கள்

நூற்றுக்கு எத்தனை சொல்வாயா

காவல் பணியில் எம் சமுதாயம்

நூற்றுக்கு எத்தனை சொல்வாயா

ராணுவத்தில் எம் சமுதாயம்

நூற்றுக்கு எத்தனை சொல்வாயா

ஐ ஏ எஸ் கள் எத்தனை பேர்

ஐ எஃப் எஸ் கள் எத்தனை பேர்

ஐ பி எஸ் கள் எத்தனை பேர்

கணக்கைம் நீ சொல்வாயா?

வெள்ளை அறிக்கை தருவாயா?

பாலைவனத்தில் கருகும் நாங்கள்

பாடம் படிக்க வேண்டாமா

இறைச்சி வெட்டும் எங்கள் கைகள்

இலக்கியம் படிக்க வேண்டாமா

தோலைச் சுமந்து நாறும் தோள்கள்

நூலைச் சுமக்க வேண்டாமா

பீடி சுற்றும் எங்கள் கைகள்

பீடை நீங்க வேண்டாமா

மலர் மாலைகள் இனி வேண்டாம்

மணிமண்டபங்கள் இனி வேண்டாம்

வேண்டியதெல்லாம் இடஓதுக்கீடே

மத்தியஅரசு

காங்கிரசே காங்கிரசே

அமைத்தாயே அமைத்தாயே

கோபால் சிங் கமிஷன் அமைத்தாயே

ச்ச்சார் கமிஷனும் அமைத்தாயே

முஸ்லிம்களை ஏமாற்ற

மிஸ்ரா கமிஷனும் அமைத்தாயே

கமிஷன் அளித்த பரிந்துரையை

காலில் போட்டு மிதித்தாயே

மத்திய அரசே மத்திய அரசே

சச்சாரு அறிக்கையை இன்னுமா படிக்கலே

மிஸ்ராவின் அறிக்கை ஏன் உனக்குப் பிடிக்கலே

அமுல்படுத்து அமுல்படுத்து

ஆட்சியாளரே அமுல்படுத்து

சச்சார் – மிஸ்ரா அறிக்கைகளின்

பரிந்துரையை அமுல்படுத்து

நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை

ஊழல் செய்து கொள்ளை அடித்த

பணத்தில் பங்கு கேட்கவில்லை

படிப்பறிவு கேட்கிறோம்

வேலை வாய்ப்பு கேட்கிறோம்

காங்கிரஸே! காங்கிரஸே!

2004 தேர்தலிலே

இட ஒதுக்கீடு தருவோம் என்று

அறிக்கையிலே சொன்னாயே

2009 தேர்தலிலும்

வாக்குறுதி தந்தாயே

ஓடிப் போச்சுஓடிப் போச்சு

பத்தாண்டு ஓடிப் போச்சு

என்ன ஆச்சி என்ன ஆச்சி

இடஒதுக்கீடு என்ன ஆச்சு

வாக்குகளை வாங்கி விட்டு

வாக்குறுதி மறந்தாயே

காலம் இன்னும் இருக்கிறது

இட ஒதுக்கீட்டைத் தந்து விடு

பறிக்கப்பட்ட உரிமைகளால்

பாதிக்கப்பட்ட எங்களுக்கு

பாரபட்சம் காட்டாமல்

பரிந்துரையை அமல்படுத்து

தாழ்த்தப்பட்டோர் நிலையை விடவும்

தாழ்ந்து கிடக்கும் சமுதாயம்

வீணாய் காலம் தாழ்த்தேதே

எங்கள் வயிற்றில் அடிக்காதே

தமிழகஅரசு
உயர்த்திக் கொடு உயர்த்திக் கொடு

இடஒதுக்கீட்டை உயர்த்திக் கொடு

தமிழக அரசே அதிமுக அரசே

இடஒதுக்கீட்டை உயர்த்திக் கொடு

தமிழக அரசேதமிழக அரசே

தந்துவிடுதந்து விடு

ஏழு சதவீத இடஒதுக்கீட்டை

தந்து விடுதந்து விடு

உயர்த்தி விடுஉயர்த்தி விடு

மூனரை சத ஒதுக்கீட்டை

ஏழாக உயர்த்தி விடு

தமிழகத்தின்  முதல்வரே

ஆணையம் போட அவசியமில்லை

ஆட்சியில் நீங்கள் இருப்பதால்

ஆணை  மட்டும் போதுமே

மூனரை சத ஒதுக்கீட்டில்

முழுப் பயனும் கிடைக்கலியே

முறைகேடும் நடக்குதே

முறையீடு செய்த பின்னும்

முறைகேடு தொடருதே

தமிழகத்தின் முதல்வரே

ஆட்சிக்கு நாங்கள் வந்து விட்டால்

உயர்த்தித் தருவோம் என்றீரே

மாதம் முப்பது போன பின்பும்

மூச்சு பேச்சு இல்லையே

நியாயம் தானா நியாயம் தானா

முஸ்லிம்களை வஞ்சிப்பது

நியாயம் தானா நியாயம் தானா

ஏமாற மாட்டோம்ஏமாற மாட்டோம்

இனியும் நாங்கள் ஏமாற மாட்டோம்

இட ஒதுக்கீடு ஒன்றைத் தவிர

வேறு எதையும் ஏற்க மாட்டோம்

இருக்கின்றோமேஇருக்கின்றோமே

பதிமூன்று சதம் இருக்கிறோமே

வாரி கொடுக்கத் தேவையில்லை

பாதி கொடுக்கக் கூடாதா

இவ்வாறாக வின்னைத்தொடுமளவிற்கு மக்கள் கோஷமிட்டனர் 

புகைப்படங்களும்,செய்தியும் 
திருச்சியிலிருந்து எமது அதிரை செய்தியாளர் 
N.K.M.புரோஜ்கான் 

No comments:

Post a Comment

கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.

கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

Your comment will be published after approval