12-10-2014 ஞாயிறு இன்று அதிராம்பட்டினம் பவித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழா,
இஸ்லாமியர்கள்
மற்றும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் வாழும் மக்களிடேயே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதிரை இளைஞர்களின் சார்பில் இரண்டாம் ஆண்டாக பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ( ஈத் மிலன் ) அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் இன்று 12-10-2014 காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம். ஹாஜா முகைதீன் தலைமை வகித்தார். காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஊர் ஜமாத் தலைவர்கள் - கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.எஃப்.டி அறக்கட்டளையின் துணைத்தலைவர் கே.வி.எஸ் ஹபீப் முஹம்மது, வழக்கறிஞர் சம்பத் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் எம். ஹாஜா முகைதீன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - ஊர் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான வரவேற்பும், விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அதிராம்பட்டினம் ஈத் மிலன் கமிட்டி ஏற்பாடு செய்திருந்தது.
அனைத்து மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இவ்விழா அமைந்திருந்ததாகவும், இதுபோன்று பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என்றும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மத அன்பர்களும் தெரிவித்தனர்.
பதிப்புரை , சவ்கத் அலி
BOSTON, U.S.A.
பதிப்புரை , சவ்கத் அலி
BOSTON, U.S.A.
No comments:
Post a Comment
கருத்திடும் உரிமையை கவனமுடன் கையாளுங்கள்.
கருத்திடுமுன் இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.
Your comment will be published after approval